கம்ப்யூட்டர் பாதுகாப்பு   - வலிமையான பாஸ்வேர்ட்

password copy
இன்று வீட்டுக்கு சாவி கூட இப்படி அப்படி இருக்கலாம்? வீதி முனை சாவி மெக்கானிக்கை அழைத்தால்,அச்சாக இன்னொரு சாவி தந்திடுவார்.
ஆனால் நம் பாஸ்வேர்ட் சரியாக இல்லாமல், அடுத்தவர் எளிதாக அறிந்துகொள்ளும்நிலையில் இருந்தால்,நம்நிலை மிகமோசமாக மாறிவிடும். அதனா ல்தான் கம்ப்யூட்டர் பாதுகாப்பு குறித்து கணிணி நிபுணர்கள் பலர், வலிமையான பாஸ்வேர்ட் அமைக்கவேண்டும் என எச்சரிக்கை விடுகிறார்கள்.
மிக ஸ்ட்ராங்கான பாஸ்வேர்ட் அமைக்கும் சில வழிகளை இங்கு காணலாம். தங்கள் நிறுவன த்திற்கு மிகக் கட்டுக் கோப்பான தகவல் தொழில் நுட்ப கட்டமைப்பை கம்ப்யூட்டரில் அமைப்பவர் கள், இவற்றிற்கான பாஸ்வேர்ட்கள் அமைக்க, அதற்கென்று பாஸ்வேர்ட் அமைக்கும் புரோகிரா ம்களை நிறுவிக்கொள்ளலாம். இவை ரேண்டமைஸ்டு பாஸ்வேர்ட் என் று சொல்லப்படும், யாரும் கணிக்க இயலாத பாஸ்வேர்ட்களை அமைத்து இயக்குகின்றன. மேலும் குறிப்பிட்ட கால இடைவெ ளியில் அவற்றைமாற்றவும் செய்கின்றன. எனவே இத்தகைய நிறுவனங்கள், கட்டணம் செலுத்தி அத்த கைய பாஸ்வேர்ட் புரோகிராம்களை வாங்குவதுதா ன் நல்லது. பாஸ்வேர்டில் எழுத்து, எண் மற்றும் சிற ப்புகுறியீடுகளை அமைக்கவும். எழுத்துக்களைக்கூட பெரிய மற்றும் சிறிய எழுத்துக்களைக்கொண்டு அமைக்கலாம். எண்கள் தொடர்ச்சியாக இல்லாமல் இடைஇடையே சிறப்புக் குறியீடுகளை அமைக்கலாம்.
ஸ்மார்ட்போன் கேலரிக்கு பாஸ்வேர்ட்களை நம் நினைவில் நிறுத்திக்கொள்ளும் வகையில் எளிதாக அமைப்பதனைக் கைவிடவேண்டும். அதற்குப் பதிலாக, நினைவில் நிற்கக்கூடிய பொருளற்ற சொல் தொடர்களை அமைக்கலாம். lalulalu என்பதெல்லாம் அத்தகைய சொல் தொடர்களே.
இதனை L*alu(L)alU என்றபடி இன்னும் நீளமாக அமைக்கலாம். பாஸ்வேர்ட்களை குறிப்பிட்ட கா லத்தில் மாற்றிக்கொண்டே இருக்கவேண்டும். இன்றைய கம்ப்யூட்டர் பயன்பாட்டில், இமெயில் புரோகிராம்கள், இன்டர் நெட் பேங்கிங்சேவை, சோஷியல் நெட்வொர்க்தொடர்பு, நிறுவன வேலை இயக்கம், பொது கம்ப் யூட்டர்களில் வேலை என பலவித இடங்களில் பாஸ்வேர்ட் பயன்படுத்த வேண்டியுள்ளது. இவற்றை நினைவில் வைத்து அவ்வப்போது மாற்றுவ து சற்று கடினமே.


No comments:

உங்கள் கருத்துக்கள் இங்கே......
Your comments here ......


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.

அபிராமியின் பக்கம் . Powered by Blogger.