பல உயிரினங்கள அழிய காரணமாய் இருந்த கன உலோக நச்சு : பிரான்ஸ் அறிவியலாளர் கண்டுபிடிப்பு
பிரான்ஸின் தேசிய அறிவியல் ஆராய்ச்சி மையத்தின் கீழ் திஜ்ஸ் வாண்டேன்ப்ரோக்கே என்ற அறிவியலாளர் நடத்திய ஆராய்ச்சியில் ஒரு செல் அமைப்பு கொண்ட நுண் பாசியின் படிமம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது.
அது சுமார் 415 லட்சம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய நுண் பாசியுடையது. அந்த பாசியின் உடலமைப்பு சீரற்று இருப்பதற்கு அந்த கால கட்டத்தில் கன உலோக நச்சு பரவியதே காரணம் என்கிற அதிர்ச்சி தரும் செய்தி தற்போது வெளியாகியுள்ளது. இது பல்வேறு உயிரினங்கள் வேரோடு அழிய காரணம் எனவும் இந்த அறிவியலாளர் குழு கருதுகின்றது.
இந்த நுண்ணுயிரியின் உடலில் இரும்பு, ஈயம் மற்றும் ஆர்செனிக் போன்ற உலோகங்கள் கண்டெடுக்கப்பட்டன. இவையே தற்போதைய கால கடல்வாழ் உயிர்களிலும், உருவத்தில் குறைபாடுகளை ஏற்படுத்தியிருக்கும் நச்சுக்களாக அடையாளம் காணப்படுகின்றன.
இதுவரை கிடைத்துள்ள தகவல்களின்படி இந்த உலோகங்களின் நச்சுத்தன்மை கடல்மட்டத்தில் ஆக்ஸிஜன் ஏற்றத்தைத் தடுத்ததாக அவர்கள் கருதுகின்றனர். எனவே, அதில் வாழ்ந்துவந்த பல உயிரினங்கள் அழிந்துபோகக் காரணமாக கருதப்படுகிறது.
No comments:
உங்கள் கருத்துக்கள் இங்கே......
Your comments here ......
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.