உங்கள் ஸ்மார்ட் போன்களை சுத்தம் செய்வது எப்படி .
வாங்க முயற்சி பண்ணலாம்..!
டாய்லெட் பேப்பரில் இருக்கும் கிருமிகளைவிட அடிக்கடி தொடப்படும் மொபைல் போன்களில்தான் கிருமிகள் அதிகம்என்கிறது பலஆராய்ச்சிகள். அப்படி பார்த்தால் டாய்லெட்டில் நம் காதுகளை யை கொண்டுபோய் வைப்பதற்கு சமம், அப்படித் தானே..!
அவ்வளவு அசுத்தமாகும் அளவிற்கு நாம் நமது ஸ்மார்ட்போன்களை இடைவிடாது பயன்படுத்திக் கொண்டே இருக்கின்றோம். அதை சுத்தம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் நம்மில் பலருக்கு இருப்பதில்லை. அதற்கு காரணம், அது ஏதோ ரொம்ப டெக்னீக்கலான வேலை என்று நாம் நினைப்பதால்தான்.
ஆனால் அப்படி ஒன்றுமில்லை. ஸ்மார்ட்போன் களை சுத்தம் செய்வது ஒன்றும் பெரிய கம்பசூத் திரமில்லை, ரொம்ப ஈஸிதான். முயற்சி பண்ண லாம் வாங்க..!
சுத்தம் செய்ய தேவையான பொருட்கள்:
பஞ்சு கலக்காத மைக்ரோ ஃபைபர் துணி, காது சுத்தம் செய்ய உதவும் காட்டன் ஸ்வாப்ஸ், டிஸ்டில்டு வாட்டர், ரப்பிங் (ஐசோப் புறப்பில்) ஆல்கஹால்.
முதல் வேலை :
சுத்தம்செய்தல் என்று வந்துவிட்டால், முதலில் போனை ஸ்விட்ச் ஆஃப் செய்து விட வேண்டும்.
கேஸ்களை அகற்றுங்கள் :
போன் கேஸ்கள் மற்றும் கவர்கள் போன்றவற்றை அகற்ற வேண்டும். அதற்குள்ளேயே தூசிகள் குவிந்து கிடப்பதை காணலாம்.
பேட்டரி மற்றும் பேனல் :
பின்புறம் உள்ள பேனல் மற்றும் பேட்டரியையும் கழற்றி விடுங்கள்.
ஸ்க்ரீன் கார்டு :
ஸ்க்ரீன் ப்ரொடெக்ட்டரை விளக்கும்போது அதிக கவனம்தேவை, சிறியகீறல்கள் ஏற்படும். ஏற்கனவே பெரியகீறல்கள், விரிசல்கள்கொண்ட மொபைல்களின் ஸ்க்ரீன் கார்டுகளை விளக்காம லேயே இருப்பது நல்லது.
கீப்பேட்டில் ஆரம்பிக்கலாம் :
காட்டன் ஸ்வாப் ஒன்றை எடுத்து அதை டிஸ்டி ல்டு ரப்பிங் ஆல்கஹாலில் மூழ்கி எடுத்து அதிக வலுவுடன் அழுத்தாமல், மெதுவாக அனைத்து பட்டன்களுக்கு உள்ளேயும் விட்டு நன்றாக துடைக்கவும்.
பின்புற பேனல் :
பிளாஸ்டிக்காக இருந்தால் டிஸ்டில்டு ரப்பிங் ஆல்க ஹாலில் மூழ்கி எடுத்து, மெட்டலாக இருந்தால் தண்ணீரில் மூழ்கி எடுத்தும் துடைக்கலாம். அவ்வாறே பேட்டரி கவர் பகுதியையும் சுத்தம் செய்ய வேண்டும்
மறுமுறை வெறும் காட்டன் ஸ்வாப் :
திரவங்கள் கொண்டு துடைத்து முடித்தபின் வெறும் காட்டன் ஸ்வாப் கொண்டு மறுமுறை துடைக்க வேண்டும்.
கேமிரா மற்றும் ஃப்ளாஷ் :
காட்டன் ஸ்வாப்பை தண்ணீரில்நனைத்து கேமரா மற்றும் ஃப்ளாஷ்களை, ஸ்வாப்பை சுழற்றிவதின் மூலம் சுத்தம் செய்ய வேண்டும்.
மெதுவாக துடைக்க வேண்டும் :
பெரும்பாலான பகுதிகள் சுத்தமாகி இருக்கும், இனி ஸ்க்ரீன் மற்றும் பின்புற பேனலை மட்டும் லேசாக க வனித்தால்போதும். அதை பஞ்சு கலக்காத மைக்ரோ ஃபைபர் துணிகொண்டு மெதுவாக துடைக்கவேண்டு ம். ஸ்க்ரீன் கார்டை கழட்டி விட்டோம் என்ற ஞாபகம் இருக்கட்டும் இல்லையெனில் ஸ்க்ராட்ச் உறுதி.
ஃபைனல் டச் :
கடைசியாக உங்கள் போன்பேனல் அல்லது கவர்க ளையும் டிஸ்டில்டு ரப்பிங் ஆல்கஹாலில் மூழ்கி எடுத்த காட்டன் ஸ்வா ப் மூலம் சுத்தம் செய்யுங்கள், பளபளக்கும் உங்கள் ஸ்மார்ட்போன்.
No comments:
உங்கள் கருத்துக்கள் இங்கே......
Your comments here ......
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.