ஈழத்து நடிகை திவ்யாவின் துணிச்சல்!

உண்மையில் அந்த வீடியோவை பார்த்து வியந்து போனேன். இந்தப் பிரச்சனைக்கு இப்படி ஒரு முடிவு வரும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை.
தமிழ்நாட்டு சினிமாவின் நடிகைகள் சம்பந்தமான நிர்வாண ஒளிப்படங்கள், வீடியோக்கள் வந்திருக்கின்றன. அவைகளில் பெரும்பாலானவை போலியானவை.
ஆயினும் சில உண்மையான ஒளிப்படங்களும் வந்திருக்கின்றன. அண்மையில் நடிகை வசுந்தராவின் படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

இப்படி படங்கள் வெளியான நேரங்களில் எல்லாம் இந்த நடிகைகள் செய்வது ஒன்றைத்தான். ‘அது என்னுடைய படம் இல்லை, கணணியில் ஒட்ட வைத்த படம்’ என்று ஒரேயடியாக சாதித்து விடுவார்கள்.



இப்படியான பிரச்சனைகளில் இருந்து ஒடி ஒளிந்த நடிகைகளைத்தான் பார்த்திருக்கிறேன். இதை சரியான முறையில் எதிர்கொண்ட நடிகைகளை இதுவரை கண்டதில்லை.

ஈழத்து நடிகை திவ்யா இதை சரியான முறையில் எதிர்கொண்டிருக்கிறார் என்று சொல்வேன். இந்த சமூகத்தின் மீது அவர் காறி உமிழ்ந்திருக்கிறார்.
திவ்யா ஓடி ஒளியவில்லை. ‘அது தன்னுடைய கைத்தொலைபேசயில் எடுத்ததுதான், திருத்தக் கொடுத்த இடத்தில் சிலர் அதை வெளியிட்டு விட்டார்கள்’ என்று வெகு அலட்சியமாக அறிவித்து விட்டார்.

தனது வீடியோவை வைத்து சில ஊடகங்கள் சக கலைஞர்களை இழிவுபடுத்தியதற்காக, கலைஞர்களிடமும் பொது மக்களிடமும் மன்னிப்பும் கோரியிருக்கிறார்.

தன்னைப் பற்றி கேவலமாக எழுதி, அவர்கள் தங்களையே கேவலப்படுத்துகிறார்கள் என்றும் நான் எதற்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றும் சாட்டையடியாக பதில் கொடுத்திருக்கிறார்.

அந்த வீடியோ முழுதும், அவர் சக கலைஞர்கள் மீது பழி சுமத்தப்பட்டதற்கே விளக்கம் கொடுக்க முனைகிறார். தன்னுடைய வீடியோ பற்றி அவர் அதிகம் பேசவில்லை.

இதை ஒரு இளம் பெண்ணின் அசட்டுத் துணிச்சல் என்று எடுத்துக் கொள்ள முடியவில்லை. இந்த சமூகத்தின் பெண் பற்றியதும், நிர்வாணம் பற்றியதுமான பார்வை அலட்சியப்படுத்தப்பட வேண்டிய ஒன்று என்கின்ற ஆழமான புரிதல் அவருக்கு இருப்பதாகவே நான் நம்புகின்றேன்.
அவருடைய துணிச்சலுக்கு தலை வணங்குகின்றேன்.

No comments:

உங்கள் கருத்துக்கள் இங்கே......
Your comments here ......


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.

அபிராமியின் பக்கம் . Powered by Blogger.