pista_with_shell

உடல் அழகு பெற 

பிஸ்தா..!

பிஸ்தாவில் அதிக அளவில் நன்மைகள் நிறைந்துள்ளது.
பிஸ்தா உடலின் கெட்ட கொழுப்பை கட்டுப்படுத்தி நல்ல கொழுப்பை அதிகரிக்கின்றது 
இதன் மூலம் உடலின் தேவையற்ற கொழுப்புத் தன்மைகள் நீக்கப்பட்டு இதயம் பலமாக செயல்பட உதவுகின்றது. பிஸ்தாவில் உள்ள வைட்டமின் ஏ, வைட்டமின் ஈ மற்றும் நோயெதிர்ப்பு அழற்சி தன்மைகள் உடலில் ஏற்படும் நீர் கட்டி மற்றம் வீக்கம் போன்றவை ஏற்படாமல் தடுக்கின்றது.

பிஸ்தாவில் உள்ள 60மூ பாஸ்பரஸ் டைப் 2 நீரழிவு நோயில் இருந்து பாதுகாக்கிறது. மேலும் பிஸ்தாவில் உள்ள பாஸ்பரஸ் புரதச்சத்தை அமினோ அமிலமாக செய்து, குளுக்கோஸ் தன்மையை கொடுத்து, உடலுக்கு வலிமை சேர்க்கிறது. பிஸ்தாவில் உள்ள வைட்டமின் பி6 நரம்பிற்கு மிகவும் நல்லது. வைட்டமின் பி6 ஒரு ஆரோக்கியமான நோய் எதிர்ப்பை அதிகரிக்கும் காரணியாகும். இதனால் உடலில் இரத்தத்தின் ஓட்டம் சீராக ஓடுகின்றது. இத்தகைய வைட்டமின் பி6 பிஸ்தாவில் அதிக அளவில் உள்ளது.
பிஸ்தாவில் உள்ள வைட்டமின் B6 இரத்தத்தின் ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவுகிறது இதனால் மூளை நல்ல முறையில் செயல்படுகின்றது. மண்ணீரல் போன்ற சுரப்பி, நாளமில்லா சுரப்பி போன்றவை ஆரோக்கியமான மற்றும் தொற்று நோயை எதிர்க்கும் சுரப்பியாகும். அவை இரத்தத்தில் உள்ள வெள்ளை இரத்த அணுக்கள் சரியாக பணி புரிண செய்கின்றது.
இத்தகைய சக்தியானது பிஸ்தாவில் கிடைக்கின்றன. பிஸ்தாவில் உள்ள வைட்டமின் ஈ சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. எப்படியெனில் இதனை சாப்பிட்டால் இது சருமத்தின் மென்சவ்வுகளை ஒருங்கிணைக்கிறது. இதனால் சூரிய கதிர்கள் நம்மை தாக்காமல் பாதுகாக்கின்றது. இதன் மூலம் சருமமானது ஆரோக்கியமாகவும், அழகாகவும் காணப்படுகினறது.
பிஸ்தாவில் உள்ள வைட்டமின் ஈ சருமத்தில் தோன்றும் வயதான தோற்றத்தை போக்கி இளமையான தோற்றத்தை அளிக்கின்றது இதற்கு இந்த பிஸ்தாவில் உள்ள எண்ணெய்ப் பசை தான் காரணம். இதில் உள்ள வைட்டமின் பி6 இரத்த எண்ணிக்கையின் அளவை அதிகரிக்க உதவுகின்றது. இதனால் இரத்த வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு.
புற்றுநோய் மற்றும் நோய்த்தொற்றுக்கள் தாக்குவதைத் தடுக்கிறது. பிஸ்தாவை தினமும் எடுத்து கொள்வதால், சருமத்திற்க நல்ல நிறத்தை கொடுக்க முடியும் ஏனெனில் இதில் அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் கணிசமான அளவில் உள்ளது. மேலும் வழக்கமான உணவில் பச்சை ஆப்பிள்களை சேர்த்து கொண்டாலும், மினுமினுப்பான சருமத்தைப் பெற முடியும்.

No comments:

உங்கள் கருத்துக்கள் இங்கே......
Your comments here ......


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.

அபிராமியின் பக்கம் . Powered by Blogger.