ஒட்டகத்தைக் கொன்ற காகம்




ஒரு மிகச் சிறிய காட்டில் மதோற்கடன் என்ற பெயரை உடைய சிங்கராஜா தனக்கு மந்திரிகளாக நரி, புலி, காகம் ஆகிய மூன்றையும் வைத்துக்கொண்டு அரசாட்சி நடத்தி வந்தார்.

ஒரு நாள் அந்தக் காட்டு வழியாக வழி தவறி ஓர் ஒட்டகம் வந்தது. காககம் ஒட்டகத்தைப் பார்த்து அதிகாரமாக யார் நீ என்று கேட்டது. ஒட்டகம் பயந்து போய் வழி தவறி இந்த காட்டுக்குள் வந்து விட்டேன் தயவு செய்து என்னைக் காப்பாற்றுங்கள் என்று காகத்திடம் கேட்டது.

உடனே காகம் ஒட்டகத்தை சிங்கராஜாவிடம் அழைத்துச் சென்றது. சிங்கராஜா! ஒட்டகத்திடம் இனி நீ இந்த காட்டில் வசிக்கலாம் என்றும், உன்னை என் மந்திரிகளுள் ஒருவராக நான் சேர்த்துக் கொள்கிறேன் என்றும், இனிமேல் உன்னுடைய பெயர் மந்தானகன் என்றும் பெயர் வைத்தது.

ஒரு நாள் சிங்கராஜாவுக்கு உடல் நலம் சரியில்லை. இன்று நீங்கள் நால்வரும் சென்று வேட்டையாடி எனக்கு உணவு கொண்டு வாருங்கள். நான் உண்ட பின்னர் மீதமுள்ள உணவினை நீங்கள் உண்ணுங்கள் என்று கட்டளையிட்டது. நான்கும் ராஜாவுக்கு உணவு தேடி காட்டுக்குள் அலையோ அலை என்று அலைந்தன. ஆனால் ஓர் இரையும் அகப்படவில்லை.

உடனே, காகம் ஒரு திட்டம் போட்டது. இந்த ஒட்டகம் சைவம். நாம் ஏன் இந்த ஒட்டகத்தையே இன்றைய இரையாக வைத்துக் கொள்ளக்கூடாது? என்று யோசித்தது. பின் ஒட்டகத்தை மட்டும் ஒரு வேலை கொடுத்து தனியே அனுப்பி விட்டு காகம், நரியிடமும் புலியிடமும் தன் திட்டத்தைக் கூறியது. ஒட்டகம் திரும்பி வருவதற்குள் காகமும் நரியும் புலியும் சிங்கராஜாவிடம் சென்றன. ராஜா! இன்று இந்தக் காட்டுக்குள் எங்கு தேடியும் எந்த இரையும் கிடைக்கவில்லை என்றது காகம்.

மேலும் கையில் வெண்ணெயை வைத்துக்கொண்டு யாராவது நெய் தேடுவார்களா? என்றது காகம். அந்த வெண்ணெய் வேறு யாருமில்லை நமது புதிய மந்திரியான ஒட்டகம்தான் அது! என்றது காகம். ஆ! அது எப்படி முடியும்? அது என்னுடைய அடைக்கலப் பொருள் என்றது சிங்கம்.

அதற்கு காகம், ராஜா! ஒரு குடும்பத்தைக் காப்பாற்ற அந்தக் குடும்பத்தில் உள்ள ஒரு நபரை இழக்கலாம். ஒரு கிராமத்தைக் காப்பாற்ற அந்தக் கிராமத்திலுள்ள ஒரு குடும்பத்தை இழக்கலாம். ஒரு நாட்டைக் காப்பாற்ற அந்த நாட்டிலுள்ள ஒரு கிராமத்தை இழக்கலாம். ஆதலால், இது தவறில்லை என்று அதே சாஸ்திரங்கள்தான் சொல்லியுள்ளன! என்றது காகம்.

சிங்கராஜா ஒட்டகத்தைக் கொல்ல சம்மதிக்கவில்லை. ராஜா அவர்களே! அந்த ஒட்டகமே தங்களிடம் வந்து, என்னைக் கொல்லுங்கள் என்று கூறினால், தாங்கள் அதனைக் கொல்லச் சம்மதிப்பீர்கள் தானே! என்றது காகம்.

ஆமாம் என்றார் சிங்கராஜா. அப்போது, இவர்களைத் தேடி அந்த ஒட்டகம் வந்தது. ஒட்டகம் அருகில் வந்ததும் காகம் தந்திரமாக, ராஜா! இன்று உங்களுக்கு எங்குமே இரை கிடைக்கவில்லை. தாங்கள் இன்று பசியுடன் இருப்பதை என்னால் பார்த்துக்கொண்டு சும்மா இருக்கமுடியாது. ஆதலால், தாங்கள் என்னைக் கொன்று தங்களின் பசியினைப் போக்கிக் கொள்ளுங்கள் என்று காகம் கூற சொன்னதும் ஒட்டகமும் அதை கூறி தழுதழுத்தது.

நீ எனக்கு ஒருவாய் உணவாக அல்லவா அமைந்து விடுவாய் என்றது சிங்கராஜா. உடனே, நரி, ராஜா அப்படியானால் தாங்கள் என்னைக் கொல்லுங்கள் என்று போலிப் பணிவு காட்டியது. மிகவும் சிறியவன். என் பசிக்கு நீ பயனற்றவன் என்று அதையும் மறுத்தது சிங்கராஜா. உடனே புலி, அப்படியானால் ராஜா, தாங்கள் என்னைக் கொல்லலாமே! என்று நடித்தது. நீ பருத்தவனாக இல்லை. ஆதலால், நீயும் என் பசிக்கு ஏற்றவனில்லை என்றது சிங்கராஜா.

மூவரும் ராஜாவுக்காக போட்டி போட்டுக்கொண்டு தங்கள் உயிரைத் தர முன் வந்ததில் மனம் நெகிழ்ந்து போன ஒட்டகம், ராஜா! இந்தக் காட்டில் நான்தான் உயரமானவன். பருத்தவன். நான் உங்களின் பசிக்கு ஏற்றவன். தாங்கள் தான் இந்தக் காட்டில் எனக்கு அடைக்கலம் கொடுத்தீர்கள். தங்களின் பசியைப் போக்கும் நல்ல காரியத்தை, நான் என் உயிரைக் கொடுத்தாவது செய்வேன். ஆதலால், தாங்கள் என்னைக் கொல்லுங்கள் என்றது. உடனே நரியும் புலியும் ஒட்டகத்தின்மீது பாய்ந்து அதனைக் கொன்றன.

நீதி :
தீயவர்களின் கைகளில் அகப்பட்டுக் கிடப்பதைக் காட்டிலும் அதனோடு சண்டையிட்டு மடிவதே சிறந்தது.

No comments:

உங்கள் கருத்துக்கள் இங்கே......
Your comments here ......


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.

அபிராமியின் பக்கம் . Powered by Blogger.