மூடநம்பிக்கையின் முடைநாற்றம்


தீமிதி விழாவில் நெருப்பில் விழுந்த சிறுவன், தந்தையும் படுகாயம்

பஞ்சாப் மாநிலத்தில் ஜலந் தர் நகரில் மாரியம்மா கோயி லில் ஏழு நாள்கள் திருவிழா நடைபெற்றது. திருவிழாவை யொட்டி, நெருப்பு மிதிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நெருப் புமிதிக்கும் நிகழ்வில் கார்த்திக் எனும் ஆறு வயது சிறுவனை அவன் தந்தை நெருப்பு மிதிப் பதற்காக அழைத்து சென்று உள்ளார்.


சிறுவன் கார்த்திக் வெறும் காலுடன் தீமிதித்தபோது, தீயில் விழுந்து அலறித் துடித்தான். அப்போது திருவிழாவில் வேடிக்கை பார்த்துக்கொண்டி ருந்தவர்கள் அச்சிறுவனையும், அவன்தந்தையையும் நெருப்பி லிருந்து மீட்டனர்.


சிறுவன் கார்த்திக் பலத்த தீக்காயம் அடைந்தான். அவனு டைய தந்தையும் தீக்காயமடைந் தார்.


நெருப்பில் விழுந்த சிறு வனை அருகிலிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக் கொண்டு செல்ல முயன்றபோது, அவ னது குடும்பத்தார் தடுத்துள்ள னர். சிறுவன் கார்த்திக்கை ‘கட வுள்’ காப்பாற்றுவார் என்று கூறியுள்ளனர்.


அதன்பின்னர் அச்சிறுவன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டான். அவனுக்கு மருத்துவமனையில் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக் கப்பட்டு சிகிச்சை அளிக்கப் பட்டுவருவதாகவும், அவனு டைய தந்தை 15 விழுக்காடு தீக்காயம் அடைந்துள்ளதாகவும், அவருக்கு காயங்கள் ஆறி முற்றிலும் குணமாக ஒரு வாரம் ஆகும் என்றும் மருத்துவர் ஜங்பிரீத் கூறினார்.


ஏற்கெனவே இதேபோல் சில ஆண்டுகளுக்கு முன்பாக பெண் ஒருவர் தன் மகளு டன்தீமியில் பங்கேற்ற போது தீயில் விழுந்து காயமடைந் தார்கள்.


சாத்தான் பிடித்திருப்பதாகக் கூறி சிறுவனை சங்கிலியால் கட்டிப் போட்டு துன்புறுத்திய தந்தை


தூத்துக்குடி அருகே சாத்தான் பிடித்திருப்பதாக கூறி 16 வயது சிறுவனை இரும்பு சங்கிலியால் கட்டிப்போட்டு தந்தையே கொடுமைப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சென்னை- தூத்துக்குடி முத்துநகர் விரைவு ரயில் நேற்று காலை தூத்துக்குடி ரயில் நிலை யம் வந்தது. அப்போது ஒரு பெட்டியில் சிறுவன் ஒருவன் காலில் இரும்பு சங்கிலியுடன் அமர்ந்திருந்தான். அச்சிறுவனை மீட்டு ரயில்வே காவல்துறையினர் விசாரித்ததில், தூத்துக்குடி அருகேயுள்ள புதுக்கோட்டை இந்திரா நகரை சேர்ந்த கட்டிடத் தொழிலாளி ஜோசப் மகன் சாமுவேல் ஜார்ஜ் (16) எனத் தெரியவந்தது. இவரது தாயார் மேரி.


தந்தை ஜோசப், தன்னை இரும்பு சங்கிலியால் கட்டிப் போட்டு அடித்து துன்புறுத்தி வந்ததாக சிறுவன் தெரிவித்தான். இரும்பு சங்கிலியை கல்லால் அடித்து உடைத்து தப்பித்து, சென்னையில் உள்ள சகோதரி வீட்டுக்குச் செல்வதற் காக ரயிலில் ஏறியதாக சிறுவன் காவல்துறையினரிடம் கூறினான்.


இதுகுறித்து தகவல் அறிந் ததும் தாயார் மேரி, ரயில்வே பாதுகாப்பு படை காவல் நிலை யத்துக்கு வந்தார். தனது மகனை பார்த்து அவர் கண்ணீர் வடித் தார். மேரி கூறும்போது, அவ னுக்கு மனநிலை சரியில்லை, சாத்தான் பிடித்துள்ளது எனக் கூறி கடந்த சில ஆண்டுகளாக கணவர் அடிக்கிறார். நான் தட்டிக்கேட்டால் எனக்கும் சாத்தான் பிடித்திருப்பதாகத் திட்டுவார்.


மருத்துவ பரிசோனையில் எந்த பிரச்சினையும் இல்லை. மனநிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் கடந்த 4 நாட்க ளுக்கு முன் கல்லால் அடித்து இரும்பு சங்கிலியை அறுத்து தப்பியோட முயன்றபோது, அவனை பிடித்து கடுமையாக தாக்கினார். இருநாட்களுக்கு முன்பு திடீரென தப்பியோடி விட்டான்.


அவனைத் தேடிச் சென்ற கணவரும் இதுவரை வீடு வரவில்லை. எனது மக னின் இந்த நிலைக்கு என் கண வர் தான் காரணம். இனி மேலும் எங்களுடன் அனுப்பி னால் எனது கணவர் கொன்றே விடுவார் எனக் கூறி கண்ணீர் வடித்தார்.


ரயில்வே பாதுகாப்பு படை உதவி ஆய்வாளர் மனோஜ்குமார் ஏற்பாட்டின்பேரில், சைல்டு லைன் மூலம் காப்பகத்தில் சிறுவன் ஒப்படைக்கப்பட்டான். மாவட்ட குழந்தைகள் நலக்குழு விடம் சிறுவன் பின்னர் ஒப் படைக்கப்படுவான். அவனிட மும் தாய் உள்ளிட்ட சம்பந்தப் பட்டவர்களிடமும் விசாரணை நடத்திய பின் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சம்பந்தப்பட்ட துறை அதிகாரி கள் தெரிவித்தனர்.


கணவருக்கு தோஷம்: பரிகாரம் செய்வதாக கூறி இளம்பெண்ணை ஏமாற்றி மோசடி


கணவருக்கு தோஷம் இருப் பதால் பரிகாரம் செய்வதாக கூறி இளம்பெண்ணை ஏமாற்றி 160 பவுன் நகை மோசடி செய் ததாக ஒருவரை காவல்துறையினர் பிடித்து விசாரித்து வரு கின்றனர்.


திருநின்றவூர் லட்சுமிபுரம் 3ஆ-வது மெயின் ரோட்டில் வசிப்பவர் சுரேந்திரன். இவர், சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி அஸ்வினி (வயது 25). இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகிறது.


அஸ்வினியுடன் கல்லூரியில் ஒன்றாக படித்த வேலூர் மாவட் டம் அரக்கோணத்தை சேர்ந்த விஸ்வநாதன் என்பவர் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் ஒரு நிகழ்ச்சியில் அஸ்வினியை சந் தித்து பேசினார்.


அப்போது விஸ்வநாதன், அஸ்வினியிடம் உனது கணவ ருக்கு தோஷம் உள்ளது. இத னால் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படும். எனவே உனது தங்க நகைகளை வைத்து பரிகாரம் செய்தால் சரியாகி விடும் என்றார்.


அதற்கு அஸ்வினி சம்மதம் தெரிவித்தார். உடனே விஸ்வ நாதன் தனது நண்பர்களான கிஷோர் அகமது, அருண் ஆகி யோரை அஸ்வினியிடம் அறி முகம் செய்து வைத்தார். கண வரின் உயிரை காப்பாற்ற வேண் டும் என்ற எண்ணத்தில் அஸ் வினி, அன்று முதல் அவ்வப் போது தனது நகைகளை விஸ்வநாதனிடம் கொடுத்து வந்தார். இவ்வாறு அஸ்வினியிடம் இருந்து மொத்தம் 160 பவுன் நகைகளை விஸ்வநாதன் பெற்றுக்கொண்டதாக கூறப்படு கிறது. ஆனால் விஸ்வநாதன் பரிகாரம் எதுவும் செய்வதாக தெரியவில்லை.


இதனால் சந்தேகம் அடைந்த அஸ்வினி, தான் கொடுத்த நகைகளை திரும்ப தரும்படி விஸ்வநாதனிடம் கேட்டார். இதையடுத்து விஸ்வநாதன் தலைமறைவாகி விட்டார்.


இதனால் அதிர்ச்சி அடைந்த அஸ்வினி, திருநின்றவூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் ஆய்வாளர் பாரதி கண்ணம்மா வழக்குப்பதிவு செய்து சம்பவம் தொடர்பாக அருண் என்பவரை பிடித்து விசாரித்து வருகிறார்.


மேலும் தலைமறைவாக உள்ள விஸ்வநாதன் மற்றும் கிஷோர் அகமது ஆகியோரையும் காவல்துறையினர் தேடி வரு கின்றனர்.


மாயமந்திரம் கற்றுத்தருவதாக இளைஞர்களை அடைத்து வைத்த சாமியார்கள் கைது

மும்பை கண்டிவாலி சாம்தா நகர்ப்பகுதியில் ஆடம்பர பங் களாவில் தேவேந்திர துபே (35), பகவான் திவாரி (39) ஆகி யோர் ஆசிரமம் நடத்தி வந்த னர். இவர்கள் தங்களைத் தாங் களே சாமியார்களாக அறிவித் துக் கொண்டனர்.


அவர்களை சந்திக்க நாளுக்கு நாள் மக்கள் கூட்டம் வர ஆரம் பித்தது. நேரடியாக கடவுள் அருள் பெறலாம் என்றும் கடன், சொத்து தகராறு, தொழில் நஷ்டம் போன்ற பிரச்சினைகள் தீர சிறப்பு யாகம் நடத்துவ தாகவும், கிரகங்கள், நட்சத்திரங் களின் நிலையை மாற்றி அமைப்பதாகவும் இருவரும் கூறி வந்தனர்.


இதை நம்பி ஏராளமானோர் ஆசிரமத்துக்கு வந்து செல்ல ஆரம்பித்தனர்.


அங்கு வரும் இளைஞர்க ளிடம் வசீகரம் செய்யும் மாய மந்திரம் கற்றுத்தருவதாகவும், தந்திரங்கள், மேஜிக் போன் றவை கற்றுத்தருவதாகவும் கூறி னர். இதையடுத்து இளைஞர்கள் இளம்பெண்கள் பலர் அவர் களது ஆசிரமத்தில் சேர்த்தனர்.


அவர்களை ஆசிரமத்தி லேயே தங்க வைத்து மாயமந் திரங்கள் கற்றுக் கொடுத்தனர். 12 இளம் பெண்களும், 16 இளைஞர்களும் அங்கு தங்கி இருந்தனர்.


காலையில் ஆசிரமத்தில் வழிபாடு நடக்கும். இதில் அனைவரும் கலந்து கொள் வார்கள். தொடர்ந்து பூஜைகள், மந்திர தந்திரங்கள் கற்றுக் கொடுத்து வந்தனர்.


5 மாதங்கள் வரை அவர் களை ஆசிரமத்திலேயே தங்க வைத்து இருந்தனர். அதன்பிறகு அவர்களை வெளியே செல்ல விடாமல் அடைத்து வைத்தனர். பெற்றோரை சந்திக்கவோ, சொந்த ஊர் செல்லவோ முடி யாமல் அவர்கள் தவித்தனர்.


இதற்கிடையே ஆசிரமத்தில் தாங்கள் அடைத்து வைக்கப் பட்டு இருக்கும் தகவலை அங்கு இருந்த ஒருவர் தனது செல்போன் மூலம் காவல்துறையினருக்கு குறுந்தகவல் தகவல் அனுப்பினார். தங்களை மீட்டுச் செல்லுமாறும் குறிப்பிட்டு இருந்தார்.


இதையடுத்து சம்தா நகர் ஆய்வாளர், காவல்துறை படையுடன் அந்த பங்களாவுக்கு சென்று அதிரடி சோதனை நடத் தினார். அப்போது அறைகளில் அடைத்து வைக்கப்பட்டு இருந்த 12 இளம் பெண்கள், 16 இளைஞர்கள் பெரியவர்கள் என மொத்தம் 28 பேரை மீட்ட னர். இளைஞர்களில் சிறுவர்கள் அனைவரும் சிறுவர் பாதுகாப்பு மய்யத்துக்கு அனுப்பி வைக்கப் பட்டனர்.


இது தொடர்பாக சாமியார் கள் தேவேந்திர துபே பகவான் திவாரி ஆகியோர் கைது செய் யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டனர். இந்த பங்களாவில் ஸ்வேதாமாலி என்ற பெண், மேலாளர் போல் பணிபுரிந்து வந்தார். அவர்தான் ஆசிரம நிர் வாகங்களையும், இதர பணி களையும் கவனித்து வந்தார். அந்தப் பெண் தலைமறைவாகி விட்டார். அவரையும் காவல் துறையினர் தேடி வருகிறார்கள்.


மீட்கப்பட்ட அனைவரும் மராட்டியம், சத்தீஷ்கர், உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர் களாவர்.


“அதிசய சொம்பு” தருவதாக மோசடி: 


செல்வம் கொழிக்கும் “அதி சய சொம்பு’ தருவதாகக் கூறி, ஒரு லட்சம் ரூபாயை வாங்கிக் கொண்டு ஏமாற்றிய 5 பேரை தருமபுரி காவல்துறையினர் கைது செய்தனர். தருமபுரியைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரி டம் ஒரு கும்பல், செல்வம் கொழிக்கச் செய்யும் “அதிசய சொம்பு’ தருவதாக கூறி ஒரு லட்சம் ரூபாய் பெற்றுள்ளது. ஆனால், குறிப்பிட்டபடி அதி சய சொம்பை அந்த கும்பல் தரவில்லை. பலமுறை அவர் களைத் தொடர்பு கொண்டு அதிசய சொம்பைத் தருமாறு கோவிந்தராஜ் வற்புறுத்தி யுள்ளார்.


இந்நிலையில், தருமபுரி ரயில் நிலையம் அருகே அந்தக் கும்பல், கோவிந்தராஜிடம் ஒரு சொம்பைக் கொடுத்துள்ளனர். அதனை பெறும்போது கை நழுவி கீழே விழுந்ததில் சொம் பிலிருந்து தீ பிடித்திருக்கிறது. இவற்றை அறிந்த காவல்துறையினர், “சொம்பு’ கொடுத்து ஏமாற்றியதாக, விஜயன் என்கிற வர்மா (40), ஆறுமுகம் (57), பழனி (67), பழனிசாமி (45), ஜெகன் என்கிற ராஜேந்திரன் (54) ஆகியோரை கைது செய் தனர்.


சாதாரண சொம்பை அதிசய சொம்பென்று சொல்லி விற் பனை செய்த கும்பல், பாஸ்ப ரஸை உள்ளே வைத்துக் கொடுத் திருக்கின்றனர். ஆனால், பாஸ் பரஸ் மீது வைக்கப்பட்ட தண் ணீரில் நனைத்த பஞ்சு சீக்கிர மாகவே காய்ந்து போனதால், கொடுக்கும்போதே தீப்பிடித் திருக்கிறது.

No comments:

உங்கள் கருத்துக்கள் இங்கே......
Your comments here ......


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.

அபிராமியின் பக்கம் . Powered by Blogger.