மனைவி ஊருக்குப் போயிருந்தபோது ஒருவர் எழுதிய கவிதை..
“தவிப்பு..”
வருடத்திற்கு ஒரு முறை இரண்டு வாரம் தாய் வீடு போகிறாய்...!
பிள்ளைகள் இல்லாமல் பொலிவிழந்து களையிழந்து காணப்படுகிறது வீடு...!
காபி போட அடுப்பில் பால் வைத்தால் பாதி பொங்கி வழிந்து விடுகிறது..!!
வீட்டைப் பெருக்கிய இரண்டு நாட்களில்
இடுப்பும் முட்டியும் வலிக்கிறது...!!
இடுப்பும் முட்டியும் வலிக்கிறது...!!
செலவிற்குப் பயந்து சமைக்க ஆரம்பித்தால் உப்பு போட மறந்து விடுகிறது..!!
இரு மடங்கு விலை வைத்தும் சொத்தைக் காய்கறிகளை..! பழங்களை
தலையில் கட்டி விடுகிறார் வண்டிக்காரர்..!!
தலையில் கட்டி விடுகிறார் வண்டிக்காரர்..!!
முரட்டுத்தனமாய் அடித்து கசக்கிப் பிழிந்து துவைத்தால் கிழிந்து விடுகிறது துணி...!!
தண்ணீர்.. மோட்டார்.. டி வி போட்டால் அணைக்காமல் தூங்கி விடுகிறேன்...!!
கதவைப் பூட்டாமலேயே.! சமயலறை எரிவாயுவை அணைக்காமலேயே.!
வெளியில் கிளம்பி விடுகிறேன்..!!
வெளியில் கிளம்பி விடுகிறேன்..!!
தயிருக்கும் இட்லி மாவிற்கும் வேறுபாடு தெரியவில்லை..!!
இப்படியாகத் தனிமையில் தவித்துப் போனாலும் நீ வந்தவுடன்
கூசாமல் பொய் சொல்கிறேன்...!!!
கூசாமல் பொய் சொல்கிறேன்...!!!
“இன்னும் ஒரு வாரம் இருந்து விட்டு வரலாமே...!!!
நான் ஜாலியாக இருக்கிறேன்...”
என்று.....!!!
என்று.....!!!
No comments:
உங்கள் கருத்துக்கள் இங்கே......
Your comments here ......
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.