ச்சான், நீ முன்னால தியேட்டருக்குப் போ... நான் பின்னாலயே தண்ணி பாட்டில் வாங்கிட்டு வந்துடுறேன்’’ னு நண்பன் சொன்னா......
நாம சினிமா டிக்கெட் எடுக்கணும்னு அர்த்தம்.
* ‘‘மாப்ள, கிளம்பிட்டேன். உங்க தெரு முக்குலதான் இருக்கேன்’’னு நண்பன் சொன் னா......
# அந்த டபேரா தலையன் இன்னமும் அவன் வீட்ட விட்டுக் கிளம்பலன்னு அர்த்தம்.
‘‘மச்சி, ஃப்ரீயா இருக்கியா? ஒரு முக்கியமான விஷயம்’’னு நண்பன் பேச்சை ஆரம்பிச்சா.....
ஏதோ ஒரு அமவுன்ட் கடன் கேட்கப் போறான்னு அர்த்தம்.
‘‘பங்காளி, வாடா சரக்கடிப்போம்’’ னு தின்ன வடையில இருக்கிற எண்ணெய தலையில தேய்க்கிற கஞ்சப் பிசினாரி நண்பன் பாசமா கூப்பிட்டா....
அவன் காதல் கதைய சொல்லப் போறான்னு அர்த்தம்.
‘‘மச்சான், உன் போனக் கொடு... ஒரு கால் பேசிட்டுத் தர்றேன். என் நம்பர்ல இருந்து கூப்ட்டா ஃப்ரெண்டு போன எடுக்க மாட்டேங்கறான்’’னு நண்பன் நம்ம
போன வாங்குனா....
நம்ம பேலன்ஸ கழுவி கவுத்தப்போறான்னு அர்த்தம்.
‘‘பங்கு, உன் பைக்க கொடுடா, அம்மாவ ரேஷன் கடையில விட்டுட்டு வந்துடுறேன்’’னு நண்பன் சொன்னா....
அவன் ஆளோட எங்கயாவது ஊர் சுத்தப் போறான்னு அர்த்தம்.
‘‘அவ ரொம்ப திமிர் பிடிச்சவ மச்சி,ரொம்ப ஹெட் வெயிட்டு’’ன்னு ஒரு பொண்ணப் பத்தி நண்பன் சொன்னா...
அந்தப்பொண்ணுகிட்ட ஏற்கனவே லவ் லெட்டர் கொடுத்து திட்டு வாங்கியிருக்கான்னு அர்த்தம்.
* ‘‘மாப்ள, இது ரொம்ப ஷார்ட் கட்டுடா’’ன்னு சந்து சந்தா நண்பன் நம்மளக் கூட்டிட்டுப் போனா...
அந்த சந்துல ஏதோ ஒரு பொந்துல அவன்
ஆளு இருக்குன்னு அர்த்தம்.
‘‘மச்சி, இதெல்லாம் ஒரு பாரா? நான் உனக்கு ஒரு நாள் வைக்கறேன் பாரு ட்ரீட்டு’’ன்னு பில்லு வர்றப்ப
நண்பன் சொன்னா....
இன்னைக்கு செலவு நம்மோட துன்னு அர்த்தம்....!!நன்பேன்டா!!!!!!!!

No comments:

உங்கள் கருத்துக்கள் இங்கே......
Your comments here ......


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.

அபிராமியின் பக்கம் . Powered by Blogger.