பெண் உறுப்பே இல்லாமல் ஒரு பெண்
இங்கிலாந்தில் பெண் உறுப்பே இல்லாமல் ஒரு பெண் வசிக்கிறார்
இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு நகரில் வசிப்பவர் ஜோனா கியானவுலி (வயது 27). இந்தப் பெண் பிறக்கும்போதே ‘ரோகிட்டான்ஸ்கை சின்ட்ரம்’ என்ற வினோத நோயுடன் பிறந்தார். இதன்காரணமாக அவருக்கு பிறவியிலேயே பெண் உறுப்பு, கருப்பை, கருப்பை வாய் என இனப்பெருக்க உறுப்புகள் எதுவுமே கிடையாது.
இது அவருக்கு 16 வயதிலேதான் தெரிய வந்தது. அவருக்கு பெண் உறுப்பினை வடிவமைத்து டாக்டர்கள் பொருத்தி உள்ளனர். இருப்பினும் பிற பெண்களைப் போன்று மாதவிடாய் வராது. சாதாரணமாக மற்றவர்கள் போல இல்வாழ்வில் ஈடுபட்டாலும், இயற்கையாக குழந்தை பெற வாய்ப்பு இல்லை.
இது பற்றி அவரிடம் கேட்டபோது, என்னை எனது தாயார் 14 வயதில் டாக்டரிடம் அழைத்து சென்றனர்.2 வருடத்திற்கு பிறகே எ மருத்துவமனை ஸ்கேன் மூலம் கண்டறியபட்டது. ‘அப்போது தான் நான் அபூர்வமான பிரச்சினைகளுடன் பிறந்திருக்கிறேன் என எனக்கு தெரிய வந்தது. டாக்டர்கள் பல்வேறு சிகிச்சைகள், அறுவை சிகிச்சைகள் செய்தனர். எனக்கு துளையிட்டு செயற்கை பெண் உறுப்பு ஏற்படுத்தினர்.இதன் மூலம் செக்ஸ் வாழ்க்கை சாதாரணமாக இருக்கும். இருப்பினும் நான் சொந்த குழந்தையை இயல்பாக பெற முடியாது. செயற்கை முறையில் வேண்டுமானால் முயற்சிக்கலாம். அதுவுமே பல இடர்ப்பாடுகளை கடந்து செல்ல வேண்டியது உள்ளது’
புதிதாக உருவாக்கபட்டா உறுப்பு குறுகியதாகவும் சிறியதாகவும் இருந்தது. இதனால் பாலியலின் போது அதிக வலி இருந்தது.பின்னர் பயிற்சியின் மூலம் அது விரிவடைய செய்யபட்டது. என கூறினார்.
தற்போது ஜோனா காதலனுடன் வாழ்ந்து வருகிறார் . தத்தெடுப்பு மூலமாக தான் ஒரு நாள் அம்மாவாக முடியும் என நம்புகிறார்.
dailythanthi.com

dailythanthi.com

No comments:
உங்கள் கருத்துக்கள் இங்கே......
Your comments here ......
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.