பிறந்த தேதியை வைத்து பொருத்தம் பார்க்கும் பலன்

 பிறந்த தேதியை வைத்து பொருத்தம் பார்க்கும் பலன் 

உங்கள் மனைவி  எப்படி தேர்ந்தெடுக்க வேண்டும் 

பொதுவாக திருமணம் செய்யும் பொழுது, ஜாதக பொருத்தம் பார்த்து திருமணம் செய்வார்கள். ஜாதகம் இல்லாதவர்களுக்கு அவர்களின் பிறந்த தேதியை வைத்து, பொருத்தம் பார்த்து திருமணம் செய்வார்கள்.

அதேபோன்று, பிறந்த தேதியை வைத்து பொருத்தம் பார்க்கும் பலன் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
1,10,19,28 ம் தேதியில் பிறந்தோர்:

இவர்கள் 3, 5, 6 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களையும், 4, 8 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களையும் மணந்து கொள்ளலாம்.
இவர்கள், 1 ம் எண்காரர்களை (பெண்கள்) தவிர்க்க வேண்டும். 1 எண் சூரியன் காரண்ம, சூரியன் (பெண்) அதிபதியாக வரும்போது அங்குக் கௌரவப் பிரச்சினைகளும் குடும்ப அன்யோன்ய குறைவும் ஏற்படும்.
திருமண தேதி 1, 10, 19, 28 தேதிகளும், 6, 15, 24 தேதிகளும் கூட்டு எண் 1 அல்லது 6 வரும் தேதிகளிலும் திருமணம் செய்ய வேண்டும்.
2,11,20,29 ம் தேதியில் பிறந்தோர்:

இவர்களின் திருமணத்திற்கு 1, 3, 5, 6 ஆகிய எண்களில் பிறந்த பெண்கள் ஏற்றவர்கள். இருப்பினும் 7 ந் தேதி பிறந்த பெண்ணேமிகவும் சிறந்தவள்.
ஆனால், 8 அல்லது 9 எண் உடைய பெண்களை மட்டும் மணக்கவே கூடாது. பின்பு வாழ்க்கையே நரகமாகிவிடும். 1 ம் எண் பிறந்த பெண்ணும், இவர்களை அடக்கி ஆட்கொள்வாள். நல்ல வழித்துணையாக அமைவாள். எனவே மணம் புரிந்து கொள்ளலாம்.
இவர்கள் தங்களது திருமணங்களை 1, 10, 19, 28, 6, 15, 16 மற்றும் 25 தேதிகளும் 24, 7, மற்றும் 1, 6, 7 எண் கூட்டு எண்களாக வரும் தினங்களிலும் செய்து கொள்ள வேண்டும்.
3,12,21,30 ம் தேதியில் பிறந்தோர்:
இவர்கள் 3, 9 ஆகிய எண்களில் பிறந்தவர்களைத் திருமணம் செய்து கொண்டால், வாழ்க்கைப் பயணம், இனிமையாக இருக்கும்.
2 எண்காரர்களையும் மணந்து கொள்ளலாம். இவர்களை அனுசரித்துப் போவார்கள்.
4,13,22,31 ம் தேதியில் பிறந்தோர்:
இவர்கள் 1, 8 ஆகிய தேதிகளில் பிறந்த பெண்களை மணந்து கொண்டால் நல்ல திருமண வாழ்க்கை அமையும். 5 அல்லது 6 எண்களின் பிறந்த பெண்களும், இவர்களுக்கு நன்மையே செய்வார்கள்.
இருப்பினும் 4 ம் தேதிகளில் பிறந்த ஆண்கள், 6 ஆம் எண்ணில் பிறந்தவர்களுடன் திருமணம் செய்து கொண்டால் அவர்களது பொருளாதார வசதிகள் முன்னேற்றமடையும்.
இவர்கள் தங்களுடைய திருமணத்தை 1 அல்லது 6 எண்ணாக வரும் தேதிகளில் வைத்துக் கொண்டால், திருமண வாழ்வின் இன்பத்தை அடையலாம்.
5,14,23 ம் தேதியில் பிறந்தோர்:
இவர்களுக்குக் காதல் மீது மோகம் அதிகம். துணிந்து காதல்களில் ஈடுபடுவார்கள். அதுவும் 5, 9 ஆகிய எண்களில் பிறந்தவர்களால் மிகவும் ஈர்க்கப்படுவார்கள்.

1, 3, 6 பிறந்தவர்களையும் மணக்கலாம். 9, 18, 27, 1, 10, 19, ஆகிய தேதிகளும் 28, கூட்டு எண் 1, 9 வரும் தேதிகளும் திருமணத்திற்கு உகந்தவை.
மேலும் 6, 15, 24 தேதிகளும், கூட்டு எண் 6 வரும் தேதிகளும் ஓரளவுக்குச் சாதகமானவையே.
குழந்தை பாக்கியம் இவர்களுக்குக் குறைவு. எனவே 2, 6 ஆகிய எண்களில் பிறந்தோரைத் திருமணம் செய்தால் குழந்தை பாக்கியம் உண்டு.
6,15,24 ம் தேதியில் பிறந்தோர்:
இவர்களுக்கு 6, 9 எண்களில் பிறந்த பெண்களினால் நல்ல திருமண வாழ்க்கை அமையும்.
1, 4, 5 ஆகிய எண்களில் பிறந்தோர்களைத் தவிர்த்துவிட வேண்டும். 3 ம் எண்காரர்களை மட்டும் மணக்கக்கூடாது.
மேலும் திருமண 1, 10, 19, 28, 6, 15, 24, 18, 27 ஆகிய தேதிகளிலும், கூட்டு எண் 1, 6, 9 வரும் தேதிகளிலும் செய்து கொண்டால் மிக்க நன்மை தரும்.
7,16,25 ம் தேதியில் பிறந்தோர்:
இவர்கள் 1, 2, 5, 6 ஆகிய எண்களில் பிறந்தவர்களை மணந்து கொண்டால் நல்ல திருமண வாழ்க்கை அமையும். குறிப்பாக 2, 1 ஆகிய தேதிகளில் பிறந்த பெண்களால் மிகவும் இனிய இல்லறம் அமையும். 

8 ந்தேதி பிறந்தவர்களை மணந்து கொண்டால், இல்வாழ்க்கையே கசந்துவிடும்.
திருமணம் செய்து கொள்ளும் நாட்களில் எண்கள் 1, 2, 6 வருவது சிறந்தது. 9 ம் எண் நடுத்தரமானதுதான்.
8,17,26 ம் தேதியில் பிறந்தோர்:
இவர்கள் 1, 4 ஆகிய தேதிகளில் பிறந்த பெண்களை மணந்து கொள்ளலாம்.
8 ம் எண்வரும் பெண்ணை மட்டும் திருமணம் செய்யக்கூடாது. 2, 7 வரும் பெண்களைத் தவிர்த்துவிட வேண்டும். 9 ம் எண் பெண்கள் இவர்களை அடக்கி ஆள நினைப்பார்கள்.
திருமணம் செய்யும் நாளின் கூட்டு எண் 1, 6 வந்தால் மிகவும் நல்லது.
9,18,27 ம் தேதியில் பிறந்தோர்:
இவர்கள் தாம்பத்தியத்தில் மகுந்த விருப்பமும், வேகமும் உடையவர்கள். தங்களது நட்பு எண்களான 3, 5, 6, 9 ஆகிய எண்களில் பிறந்தவர்களை மணந்து கொண்டால், இவர்களுக்கு ஆனந்தமான திருமண வாழ்க்கை அமையும். குழந்தை பாக்கியம் இவர்களுக்கு உண்டு. ஆண் குழந்தை நிச்சயம் ஏற்படும்.
2, 11, 20, 29, 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்த பெண்களையும், கூட்டு எண் 2, 8 வரும் பெண்களையும் திருமணம் செய்யக்கூடாது. திருமண வாழ்க்கையே கசந்துவிடும்.
திருமண நாளின் எண்கள் 3, 1 ஆகியவை வந்தால் 6, 9, குடும்ப வாழ்க்கை நன்கு அமையும்.

No comments:

உங்கள் கருத்துக்கள் இங்கே......
Your comments here ......


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.

அபிராமியின் பக்கம் . Powered by Blogger.