உன் பெயரைக்கூட நான் எழுதுவதில்லை.
ஏன் தெரியுமா?
"பேனா" முனை உன்னை குத்திவிடுமோ என்று.
இப்படிக்கு
Spelling தெரியாமல் சமாளிப்போர் சங்கம்
----------------------
அவள் என்னை திரும்பி பார்த்தாள்.
நானும் அவளைப் பார்த்தேன்..
அவள்..
மறுமடியும் என்னைப் பார்த்தாள்
நானும் அவளை மறுபடியும் பார்த்தேன்..
இப்படிக்கு
பரிட்சையில் ஒன்னுமே தெரியாமல்
திருதிரு வென முழிப்போர் சங்கம்
---------------------
காதல் One Side-ஆ பண்ணினாலும்
Two side-ஆ பண்ணினாலும்
கடைசியா Suicide தான் பண்ணக்கூடாது
இப்படிக்கு
காதல் பற்றி Four Side-ம் யோசிப்போர் சங்கம்
---------------------
அனுமதி கேட்கவும் இல்லை
அனுமதி வழங்கவும் இல்லை
ஆனால்
பிடிவாதமாக ஒரு முத்தம்.
"கன்னத்தில் கொசுக்கடி"
இப்படிக்கு
புரண்டு புரண்டு படுத்து யோசிப்போர் சங்கம்
-------------------
கிரிக்கெட்டில்
ரன் எடுக்காமல் போனால் டக் அவுட்
ரயிலில் டிக்கெட் எடுக்காமல் போனால் வித் அவுட்
வீட்டில்
கொசுவை கொல்லுவதற்கு ஆல் அவுட்
நீங்க‌
இந்த மெயிலை அப்ரூவ் பண்ணலைன்னா
நான் மூடு அவுட்
இப்படிக்கு
பாசக்கார பய புள்ளைங்க சங்கம்.
--------------------
செருப்பு இல்லாம
நாம நடக்கலாம்...
ஆனா
நாம இல்லாம
செருப்பு நடக்க முடியாது.
தீவிரமாக யோசிப்போர் சங்கம்
(எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள்
கிடையாது)
-------------------
இட்லி மாவை வச்சு
இட்லி போடலாம்
சப்பாத்தி மாவை வச்சு
சப்பாத்தி போடலாம்
ஆனா
கடலை மாவை வச்சு
கடலை போட முடியுமா?
ராவெல்லாம் முழிச்சுக்
கெடந்து யோசிப்போர் சங்கம்
------------------------
என்னதான் மனுசனுக்கு
வீடு, வாசல், காடு, கரைன்னு எல்லாம்
இருந்தாலும்
ரயில் ஏறனும்னா
ஃப்ளாட்பாரத்துக்கு
வந்துதான் ஆகனும்.
இதுதான் வாழ்க்கை.
------------------
என்னதான்
பொண்ணுங்க பைக் ஓட்டினாலும்,
ஹீரோ ஹோன்டா,
ஹீரோயின் ஹோன்டா ஆய்டாது!
அதேமாதிரி,
என்னதான் பசங்க
வெண்டைக்காய் சாப்பிட்டாலும்,
லேடீஸ் ஃபிங்கர்
ஜென்ட்ஸ் ஃபிங்கர் ஆய்டாது!
---------------------------
பஸ் ஸ்டாண்ட்ல
பஸ் நிக்கும்
ஆட்டோ ஸ்டாண்ட்ல
ஆட்டோ நிக்கும்
சைக்கிள் ஸ்டாண்ட்ல
சைக்கிள் நிக்கும்
ஆனா
கொசுவத்தி ஸ்டாண்ட்ல
கொசு நிக்குமா?
யோசிக்கனும்!
-----------------------
தத்துவம் 1:
இஞ்ஜினியரிங்
காலேஜ்ல படிச்சா
இஞ்ஜினியர் ஆகலாம்
ஆனா பிரசிடன்சி
காலேஜ்ல படிச்சா
பிரசிடன்ட் ஆக முடியுமா?
--------------------
தத்துவம் 2:
ஆட்டோக்கு 'ஆட்டோ'ன்னு
பேர் இருந்தாலும்
மேன்யுவலாத்தான் (manual) டிரைவ்
பண்ண முடியும்.
--------------------
தத்துவம் 3:
தூக்க மருந்து சாப்பிட்டா
தூக்கம் வரும்
ஆனா
இருமல் மருந்து சாப்பிட்டா இருமல்
வராது!
(என்ன கொடுமை சார் இது?)
------------------------
தத்துவம் 4:
வாழை மரம் தார் போடும்
ஆனா
அதை வச்சு ரோடு
போட முடியாது!
(ஹலோ! ஹலோ!)
-------------------
தத்துவம் 5:
பல்வலி வந்தால்
பல்லை புடுங்கலாம்
ஆனா கால் வலி வந்தால்
காலை புடுங்க முடியுமா?
இல்லை தலைவலி வந்தால் தலையைதான்
புடுங்க முடியுமா?
(டேய்! எங்க இருந்துடா கிளம்புறீங்க?)
-------------------
தத்துவம் 6:
சன்டே அன்னைக்கு
சண்டை போட முடியும்
அதுக்காக
மன்டே அன்னைக்கு
மண்டையப் போட முடியுமா?
(ஐயோ! ஐயோ! ஐயோ! காப்பாத்துங்க!)
---------------------
பில் கேட்ஸோட
பையனா இருந்தாலும்
கழித்தல் கணக்கு போடும்போது கடன்
வாங்கித்தான் ஆகனும்.
-------------------
பேக் வீல் எவ்வளவு
ஸ்பீடா போனாலும்
ஃப்ரன்ட் வீல முந்த முடியாது.
இதுதான் G உலகம்
----------------------
T Nagar போனா
டீ வாங்கலாம்
ஆனால்
விருதுநகர் போனா
விருது வாங்க முடியுமா?
--------------------
என்னதான்
பெரிய வீரனா இருந்தாலும்
வெயில்
அடிச்சா
திருப்பி அடிக்க முடியாது.
-------------------
இளநீர்லயும்
தண்ணி இருக்கு
பூமிலயும்
தண்ணி இருக்கு
அதுக்காக
இளநீர்ல போர் போடவும்
முடியாது
பூமில ஸ்ட்ரா போட்டு உரியவும்
முடியாது.
-------------------
நோ நோ நோ
நோ பேட் வோர்ஸ்
ஒன்லி பார்வர்ட்ஸ்.

No comments:

உங்கள் கருத்துக்கள் இங்கே......
Your comments here ......


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.

அபிராமியின் பக்கம் . Powered by Blogger.