வீட்டுக்காரி: என்னம்மா! டி.வி. மெகா சீரியல் கதையைச் சொல்ற?

வேலைக்காரி: இன்னிக்கு சொல்றதுக்கு எதுவும் ஊர் வம்பு இல்லை அதான்.

வீட்டுக்காரி: ?????


 ""நம்ம கல்யாண கேசட்டை ஏன் அடிக்கடி போட்டுப் பார்க்குறீங்க?''""நான் கடைசியாச் சிரிச்சதை பார்த்தேன்.''

""இவருக்கு ஞாபகமறதி அதிகமா இருக்கு, டாக்டர். எப்படியாவது சரிபண்ணுங்க.

""இவருக்கு நீங்க சொந்தமா?''

""சொந்தம் எதுவுமில்லை. என்கிட்டே வாங்கின கடனை மறந்துட்டார். அத வசூல் பண்ணத்தான் டாக்டர்.''

டாக்டர்: போஸ்ட்மார்ட்டம் பண்ணறதுக்காக இங்கே ஸ்ட்ரெச்சர்லே ஒரு பாடி இருந்ததே நீங்க பாத்தீங்களா?

அவன்: நான்தாங்க அது.


ஆசிரியர்: தினை விதைத்தவன் தினை அறுப்பான். வினை விதைத்தவன் வினை அறுப்பான். இதிலிருந்து என்ன தெரியுது?

மாணவன்: நீங்க எதையோ விதைச்சிருக்கீங்கன்னு தெரியுது, சார்.

""இலவச கல்யாண விழாவுல நாலு பெண்கள் எக்ஸ்ட்ரா வந்துட்டாங்க. ஜோடி கிடைக்கலை.''

""ம்... அப்புறம்?''

""தலைவர் கூலா தாலி கட்டிட்டார்.''


""தலைவர் என்ன ஊழல் செய்யும்போது நான் ஒரு சாதாரண குடிமகன்னு சொல்லி ஊழல் செய்யறார்?''

""பப்ளிக்கா ஊழல் செய்றாராம்.''


""இந்தத் தேர்தல்ல நான் ஜெயிக்கற மாதிரி விடியற்காலைல கனவு கண்டேன். பலிக்கும்தானேடா?''
""தலைவரே, நான் நம்பின பழமொழி இது ஒண்ணுதான். அதுவும் போச்சா. சே.''

No comments:

உங்கள் கருத்துக்கள் இங்கே......
Your comments here ......


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.

அபிராமியின் பக்கம் . Powered by Blogger.