ரகசியமாக பெருகி வரும் செக்ஸ் பொம்மைகளின் பயன்பாடு! சந்திக்க நேரிடும் அபாயங்கள்
இங்கு செக்ஸ் பொம்மைகளின் பயன்பாட்டால் சந்திக்க நேரிடும் அபாயங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.
இதுவரை பாலியல் வாழ்வில் அதிக ஆர்வம் கொண்டவர்களுக்காக வெளிநாட்டில் தான் செக்ஸ் பொம்மைகளின் விற்பனை இருந்தது. ஆனால் தற்போது அந்த செக்ஸ் பொம்மைகளின் விற்பனை இந்தியாவிலும் ரகசியமாக நுழைந்துவிட்டது. குறிப்பாக சென்னையில் இதன் பயன்பாடு அதிகமாக உள்ளது.
இதுவரை பாலியலின் மீது ஆர்வம் அதிகமாவதற்கு ஆபாச வீடியோக்கள், இணையதளங்கள் போன்றவைகள் தான் காரணமாக இருந்தது. தற்போது அத்துடன் செக்ஸ் பொம்மைகளும் சேர்ந்துவிட்டது. இந்த செக்ஸ் பொம்மைகள் சில பெரிய மருந்து கடைகளிலும், டிபார்மெண்ட் ஸ்டோர்களிலும் ரகசியமாக விற்கப்படுகிறதாம்.
டில்டாஸ் (Dildos), அதிர்விகள் (Vibrators), பட் பிளக்குகள் (Butt Plugs) போன்ற செக்ஸ் பொம்மைகள் தான் பெரும்பாலானோரால் அதிகம் பயன்படுத்தப்படுகிறதாம். இந்த செக்ஸ் பொம்மைகளைப் பயன்படுத்துவதால் சந்திக்கும் அபாயங்கள் குறித்து கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

செக்ஸ் பொம்மைகளுள் டில்டாஸ் மற்றும் பட் பிளக்குகள் தொழில் முறையாக தயாரிக்கப்படுவதில்லை. எனவே இவை கடினமாகவும், கூர்மையாகவும் இருந்து, அதனால் அந்தரங்க உறுப்புக்களில் வெட்டுக்காயங்கள், எரிச்சல் போன்றவற்றை ஏற்படுத்துவதோடு, சில சமயங்களில் அந்தரங்க உறுப்புக்களில் பெரிதளவில் பாதிப்பை ஏற்படுத்திவிடும்.
அபாயம் #2
செக்ஸ் பொம்மைகளை சரியாக சுத்தம் செய்யாமல் தொடர்ச்சியாக பயன்படுத்தி வந்தால், அதன் காரணமாக தீவிரமான நோய்த்தொற்றுக்களால் அவஸ்தைப்படக்கூடும்.
அபாயம் #3
செக்ஸ் பொம்மைகளை மற்றவர்களுடன் பகிர்ந்து உபயோகிக்கும் போது, அதனால் தீவிரமான பாலியல் நோய்களான எச்.ஐ.வி, ஹெர்பீஸ் போன்றவை வருவதற்கான அபாயம் அதிகரிக்கும்.
அபாயம் #4
செக்ஸ் பொம்மைகள் தயாரிக்கப் பயன்படுத்தும் மெட்டீரியல்கள் சிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்தி, கடுமையான அரிப்புக்கள், எரிச்சல் மற்றும் காயங்களை உண்டாக்கும்.
அபாயம் #5
சில ஆய்வுகளில் செக்ஸ் பொம்மைகள் தயாரிக்கப் பயன்படுத்தும் சிந்தடிக் மெட்டீரியல்களில் புற்றுநோயை உண்டாக்கும் கார்சினோஜென்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
அபாயம் #6
செக்ஸ் பொம்மைகளின் பயன்பாட்டின் போது, சில நேரங்களில் அவை உள்ளே மாட்டிக் கொண்டு, மருத்துவரின் உதவியுடன் வெளியேற்றிய பல வழக்குகள் இருப்பதாக ரிப்போர்ட்டுகள் உள்ளன.
அபாயம் #7
செக்ஸ் பொம்மைகளுள் ஒன்றான அதிர்விகளின் உபயோகத்தால், அந்தரங்கப் பகுதி மிகவும் சென்சிடிவ் ஆவதோடு, அந்த அதிர்விகள் பாலியல் உணர்ச்சிகளை கொஞ்சம் கொஞ்சமாக அழித்துவிடுமாம்.
No comments:
உங்கள் கருத்துக்கள் இங்கே......
Your comments here ......
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.