அமாவாசை இருட்டு
ஒரு நாள் ஒரு இருட்டு நேரத்தில ரோட்டோரமா போய்க் கொண்டிருக்கேக்க, ஒரு குப்பைக் குவியல் இருந்தத கண்டன். அதுக்கு பக்கத்தில ஒரு சாக்கு மூட்டை இருந்துச்சி, என்னடா அதுக்குள்ள இருக்குனு பார்த்தா கட்டு கட்டா பல ஆயிரம் கோடி பணம் இருந்துச்சு..
அந்த சாக்கு மூட்டைய காவிக் கொண்டு போகேக்க, பார்க்க நச்சுன்னு இருக்க ஒரு வெள்ள பொண்ணு ஒரு கடை வாசல்ல நின்னுச்சு. நானும் அவள பார்த்து சிரிச்சன். அதுக்கு அந்த பொண்ணு முறச்சுது.
அப்போ சாக்கு மூட்டைல இருந்து ஒரு கட்டு பணத்த எடுத்துக் காட்டினன். உடனே சிரிச்சுக் கொண்டு என்னோடயே அந்த இருட்டில நடந்து வந்திட்டிருந்துச்சி..
அப்படியே போய்க்கிட்டிருக்கும் போது அதே 5 வது கடைத் தெரு வாசல்ல பார்க்க கும்முன்னு இருக்க கருப்பு பொண்ணு நின்னுச்சி..
அவளயும் பார்த்து சிரிச்சன். அவளும் முறைச்சாள். உடனே சாக்கு மூட்டைல இருந்து ரெண்டு கட்டுப் பணத்த எடுத்து காட்டினன். திரும்பியும் முறைச்சிட்டிருந்த்துச்சி. அப்புறம் சாக்கு மூட்டைய அவுத்து காட்டினன்.
கட்டுக்கட்டா இருக்க பணத்த பார்த்ததும் அவளும் சிரிச்சுக் கொண்டு என்னோட வந்துட்டாள்..
அந்த அமாவாசை இருட்டு நேரத்தில ஒரு பக்கம் கருப்பு பொண்ணு, மறு பக்கம் வெள்ள பொண்ணு, அதுக்கு நடுவில நானும் நடந்து போய்க் கொண்டிருந்தன்..
திடிரென்னு ஒரு குரல் அட நாயே.... எழும்பு பின்னேரத்துல உனக்கு தூக்கம் கேட்குதானு அம்மா எழுப்பி விட்டுடா. கனவு கலைஞ்சு போச்சு..
#திரும்பி தூங்கினா மிச்சம் என்ன நடந்துச்சுனு சொல்றன்.. 😂
No comments:
உங்கள் கருத்துக்கள் இங்கே......
Your comments here ......
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.