நோயாளி: டாக்டர், வயித்து வலி என்னால பொறுக்க முடியல...
டாக்டர் : வயிறு வலிக்கும்போது, நீங்க ஏன் பொறுக்கப் போறீங்க?
போலீஸ்: இப்படியே ஊர் சொத்தை எல்லாம் கொள்ளை அடிக்கிறியே, உனக்கு கொஞ்சம் கூட வெட்கம் இல்லே? திருடன்: அதுக்குத் தான் ஐயா முகமூடி போட்டுக்கிறேன்.
==============================================================================================================
"ஆபரேஷனை பாதியில நிறுத்திட்டு டாக்டர் எதோ புத்தகத்தைப் புரட்டிக்கிட்டிருக்காரே.. ஏன்?"
"கிட்னி எங்கயிருக்குன்னு அவருக்கு சந்தேகம் வந்துடுச்சாம்!"
"பொறுப்பான ஆசிரியர் பதவியில இருக்கற நீங்க, காலையிலேயே குடிச்சுட்டு ஸ்கூலுக்கு வரலாமா?"
"எழுத்தெல்லாம் பளிச்னு தெரியணும்னா ஒரு 'கிளாஸ்'போடுங்கனு டாக்டர் தான் சார் அறிவுறுத்தினார்."
"கோழியில இருந்து தான்டா முட்டை வந்தது."
"அது எப்படிடா அவ்ளோ உறுதியா சொல்ற...
"சிக்கன் பிரியாணியில முட்டை இருக்கும். ஆனா, முட்டை பிரியாணியில சிக்கன் இருக்காது.
அதனால கோழியில இருந்துதான் முட்டை வந்தது!!!"
முதலாளி தன் மேலாளரிடம்... ஏம்பா.. அந்த மொக்கையைப் பார்த்தாலே ஏதோ ரவுடி போல இருக்கு.
. முகத்துல அரிவாள் வெட்டு தழும்பு எல்லாம் இருக்கு.. அவனைப் போய் கேஷியரா போட்டு இருக்கியே.
. பணத்தைத் தூக்கிட்டு ஓடிட்டான்னா..? அந்தத் தழும்பை அடையாளமா போலீசுக்கு சொல்லலாம் சார்..!
மானேஜர்: "இனிமே, 'சம்திங்' வாங்க மாட்டேன்'னு 'சத்தியம்' பண்ணுங்க!"
கிளார்க்: "சரி, சார்! 'எவ்வளவு' தருவீங்க?"
No comments:
உங்கள் கருத்துக்கள் இங்கே......
Your comments here ......
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.