பெண்களின் செல்ஃபோன் எண்கள் விலைக்கு......................

 பெண்களின் செல்ஃபோன் எண்கள் விலைக்கு விற்கப்படும் சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் நடந்து வருவது அம்பலமாகியுள்ளது. இதுபோல் உங்கள் ஊர்களிலும் நடக்கலாம் ஜாக்கிரதை

உத்தரப்பிரதேசத்தில் அழகான பெண்களின் செல்ஃபோன் எண்கள் ரீசார்ஜ் கடைகளில் ரூ.50 முதல் ரூ.500 வரை விற்கப்படும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
நமது வாழ்வில் மொபைல் போன் இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. அதன் மூலம் அலுவலக மற்றும் அன்றாட பணிகளை மேற்கொள்ள நமக்கு உதவுவது ஸ்மார்ட் போன் என்னும் உயர்வகை மொபைல் போன் ஆகும்.

இதில் 3ஜி, 4ஜி இணைப்பு வசதிகளுடன் கூடிய ஸ்மார்ட் போன்கள் நம் அலுவலக மற்றும் சொந்த பணிகளை உள்ளங்கைகளுக்குள் கொண்டு வருகின்றன. அதேநேரம் செல்போனை பொழுதுபோக்குக்காக பயன்படுத்துவோரும் ஏராளம்.

பள்ளி மாணவர்களில் இருந்து தொழில் அதிபர்கள் வரை அவரவர் தேவைக்கு ஏற்றவாறு மொபைல் போனை பயன்படுத்துகின்றனர். ஆனால் மொபைல் போன் வைத்திருப்பவர்களில் அதிகமான பேர் ப்ரீபெய்டு கனெக்‌ஷன் தான் உபயோகப் படுத்துகிறார்கள்.

சமீப காலமாக நகைக்கடைக்கு அடுத்து நாட்டில் கூட்டம் அதிகமாக உள்ள இடம் ரீ சார்ஜ் கடைகள். அதிலும் குறிப்பாக இளம்பெண்கள். பத்து ரூபாயிலிருந்து தொடங்கி ப்ரீ-பெய்டு மொபைலுக்கு இங்கே தான் டாப்-அப் செய்கிறார்கள். அங்குதான் தற்போது பிரச்சனை ஆரம்பித்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் அழகான பெண்களின் செல்ஃபோன் எண்கள் ரீசார்ஜ் கடைகளில் 500 ரூபாய்க்கு விற்கப்படும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. முன்பின் அறிமுகம் இல்லாத நபர்கள், பெண்களின் செல்ஃபோனுக்கு அழைத்து அடிக்கடி தொல்லை தருவதாக மாநில முதல்வர் அகிலேஷ் யாதவுக்கு புகார் வந்தது.
இதையடுத்து உதவி மையம் ஒன்றை அமைத்தார் அகிலேஷ்.

மேலும் மொபைல் போன்களில் பெண்கள் கிண்டல் மற்றும் கேலி செய்யபட்டால் புகார் தெரிவிக்க சிறப்பு எண் 1090 என அறிவித்தார். இதன்பின்னர் முதலமைச்சரின் அவசர உதவி எண்ணுக்கு புகார்கள் குவிந்தன.

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், பெண்கள் ரீசார்ஜ் செய்யும் கடைகளிலிருந்து அவர்களது எண்கள் விற்கப்பட்டது வெளிச்சத்துக்கு வந்தது. பெண்களின் அழகைப் பொருத்து 50 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை விலை நிர்ணயம் செய்யப்படுவதாக அதிர்ச்சித் தகவலும் கிடைத்தது.

கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் 6 லட்சம் புகார்கள் வந்திருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்தப் புகார்கள் பதிவான பட்டியலில் லக்னோ, கான்பூர், அலகாபாத், வாரணாசி, ஆக்ரா ஆகிய மாவட்டங்கள் முதல் 5 இடங்களைப் பிடித்துள்ளதாகவும் அவர்கள் கூறினர்.
Image may contain: one or more people and close-up

No comments:

உங்கள் கருத்துக்கள் இங்கே......
Your comments here ......


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.

அபிராமியின் பக்கம் . Powered by Blogger.