பெண்களை புரிந்து கொள்வது எப்படி?
பெண்களை புரிந்து கொள்வது எப்படி?
இந்த உலகில் கால காலமாக சொல்லப்பட்டு வரும் பொய்களில் ஒன்று பெண்களை புரிந்து கொள்ள முடியாது.நம்மால் ஒரு மலரையோ அல்லது பட்டாம்பூச்சியையோ ரசிக்க முடிந்தால்,புரிந்து கொள்ள முடிந்தால் பெண்களையும் ரசிக்கவோ அல்லது புரிந்து கொள்ளவோ முடியும்.
ஆண்களே இல்லாத, பெண்கள் ஆட்சி செய்யும் பெண்களின் உலகம் எவ்வாறு இருக்கும்?அந்த உலகத்தில் சண்டையே இருக்காது.அந்த உலகத்தில் தண்ணி, தம் இருக்காது.சண்டை வந்தால் சண்டையிடுவதற்கு பதிலாக அந்த நாடு எதிரி நாட்டுடன் பேசிக்கொள்ளாது.அந்த உலகத்தில் கொடிய செயலே கில்லுவதும்,அறைவதுமாக இருக்கும்.
ஒரு ஆங்கில படத்தில் ஒரு அருமையான காட்சி ஒன்று பார்த்தேன்.அது பெண்களின் உலகத்தை , மனதை அருமையாக படம் பிடித்துக்காட்டியது.
படத்தின் கதானாயகன் ஒரு சீன குங்பு மாஸ்டர்.ஜப்பானியர்கள் இந்த குங்பு மாஸ்டரை கொல்ல நினைக்கிறார்கள்.தன்னையும் தன் குடும்பத்தையும் எதிரிகளிடம் இருந்து காப்பாற்ற மனைவியின் வற்புறுத்துதலால் நாட்டைவிட்டே போக முயற்சி செய்கிறான்.அந்த காட்சியில் கதா நாயகன் சொல்லுவான் "நான் எவ்வளவு பெரிய குங்பு மாஸ்டர்!இருந்தும் என்னால் இந்த நாட்டுக்கு ஒன்றும் செய்ய முடியவில்லை.நான் கோழை போல் நாட்டைவிட்டு போக போகிறேன்." அதற்கு அவன் மனைவி சொல்லுவாள்.
"எனக்கு அதைப்பற்றி எல்லாம் கவலை இல்லை.நீங்கள்,நான் நம் மகன் மூவரும் உயிரோடு இருக்கிறோம்."அது போதும் என்பாள்.
உண்மையில் ஆண்கள் அறிவுப்பூர்வமானவர்கள்.பெண்கள் உணர்வுப்பூர்வமானவர்கள்.ஒரு ஆணுக்கு பித்தாகரஸ் தியரம் அவசியமாக இருக்கலாம்.ஆனால் பெண்ணுக்கு தானும் தன் குடும்பமும் மிக முக்கியம்.உண்மையில் பெண்கள் தான் உலகத்தையே உறவு பாலங்களாக பின்னி பேணிக்காப்பவர்கள் பெண்கள்.
ஒரு ஆணை திட்டிவிட்டால் பத்து நிமிடத்தில் போடா போ என தன் வேலையை பார்க்கப்போய்விடுவான்.ஆனால் பெண்ணோ இடிந்து போய்விடுவாள்.அதிலிருந்து மீள நாட்கள் அல்லது மாதங்கள் கூட ஆகலாம்.
எந்த டீக்கடையிலாவது பெண்கள் அமர்ந்து அரசியல் பேசியது உண்டா?
இல்லை.
ஏனென்றால் ஆண்கள் புறத்தன்மை வாய்ந்தவர்கள்.அவர்களுக்கு தங்கள் வீட்டைத்தாண்டி சமூகம்,அரசியல் என புறத்தன்மைவாய்ந்த விசயங்கள் வேண்டும்,
பெண்கள் அகத்தன்மை வாய்ந்தவர்கள்.அவர்களுக்கு தங்கள் அழகு,தங்கள் கவுரவம்,தங்கள் பிள்ளை என தங்களை பற்றிய அல்லது தங்களை சுற்றி உள்ளவர்கள் பற்றிய விசயம் மிக அவசியம்.ஒரு பெண்ணுக்கு மன்மோகன்சிங்கை விட அன்று நாதஸ்வரம் சீரியலில் என்ன நடந்தது என்பது முக்கியம்.
ஆண்கள் உடல் வலிமையானவர்கள்.அதனால் தான் ஆண்கள் ஆட்சி செய்யும் இந்த உலகம் இத்தனை வன்முறைத்தனமாக இருக்கிறது.பெண்கள் மன வலிமையானவர்கள்.பெண்களின் உடம்பே அதிக பட்ச வலிகளை தாங்க கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.அதனால் தான் பிரசவம் போன்ற விசயங்களை இலகுவாக தாண்டிவிடுவார்கள்.அது மட்டும் இல்லாமல் ஒரு செயலை எடுத்துவிட்டால் செய்யாமல் விட மாட்டார்கள்.
ஒரு பெண்ணால் தன் எதிரே நிற்பவர்களின் உடல் மொழிகளை எளிதாக புரிந்து கொள்ள முடியும்.உதாரணமாக ஒரு ஆண் ஒரு பெண்ணிடம் பொய் சொல்லுகிறான் என்றால் அந்த பெண்ணால் அவன் பொய் சொல்லுகிறான்,என்பதை ஆணின் உடல் மொழியால் அறிந்து கொள்ளமுடியும்.
ஒரு பெண்ணிற்கு சமுதாயத்தின் மீதும் அதன் கட்டுப்பாடுகளின் மீது எந்த அக்கரையும் இல்லை.அவள் நினைத்தால் அத்தனைக்கட்டுப்பாடுகளையும் எளிதாக உடைத்து தாண்டிவிடுவாள்.
ஒரு பெண்ணுக்கு இரண்டு ஆண் நண்பர்கள் இருக்க முடியும்.ஆனால் ஒரு ஆணுக்கு இரண்டு பெண் நண்பர்கள் இருந்தால் அவன் செத்தான்.
பெண்கள் ஒவ்வொருவரும் ஒரு உலகம்.அவர்களுக்கென பிடித்தமான விசயங்கள்,செயல்பாடுகள்,கட்டுப்பாடுகள் எல்லாம் பெண்ணிற்கு பெண் வேறுபடும்.
தன்னை மதிக்கும்,தன்னை காக்கும்,தன் மேல் அன்பைப்பொழியும் ஆண்களையே பெண்களுக்கு பிடிக்கும்.ஒரு ஆண் வலிமையற்றவனாய்,அன்பில்லாதவனாய் இருந்தாள்.உடனே அவனை விட்டு விலக ஆரம்பிப்பாள்.
பெண்களுக்கு உள்ளுணர்வு தன்மை அதிகம்.அதனால் அவர்கள் எதிரிகள் அருகில் வரும் போதே முறைக்க அல்லது எதிர்க்க ஆரம்பித்துவிடுவார்கள்.
ஒரு ஆண் துரோகங்களையும்,அவமானங்களையும் எளிதாக மறந்து விடுவான்.ஆனால் ஒரு பெண் துரோகங்களை,அவமானங்களையும் மறக்கவும் மாட்டாள்.மன்னிக்கவும் மாட்டாள்.
உண்மையில் பெண்களுக்கு என்னதான் வெண்டும்?
இந்த கேள்வியை கேட்டவர் புகழ் பெற்ற மனோதத்துவ மேதை சிக்மண்ட் பிராய்டு.ஆனால் அவருக்கே இந்த கேள்விக்கு பதில் தெரியவில்லை.
சரி பெண்களுக்கு உண்மையில் என்ன தான் வேண்டும்.
அவர்களுக்கு எல்லாமே தான் வேண்டும்.இதை எப்படி புரிந்து கொள்வது.உதாரணமாக ஒரு பெண் 250 ரூபாய் சேலை எடுக்கப்போனால்.கீழ் சொன்னவாரு அவர்கள் நடந்து கொள்வார்கள்.
எல்லா மாடல்களையும் பொறுமையாக பார்ப்பார்கள்.
பெரிய பெரிய பூவாக இல்லாமலும் ,வெறும் கட்டம் கட்டமாக இல்லாமலும், நவீன ட்ரண்டாக இருக்க வேண்டும்.
கண்டிப்பாக எளிமையாக இருக்கக்கூடாது.
பட்டிக்காட்டுதனமாக இருக்கக் கூடாது.
அடுத்தவர்கள் பார்த்தவுடன் வாய்பிளக்க வேண்டும்.
யாருமே கட்டாத,யாருமே கற்பனை கூட கண்டிராத ஒரு சேலை
எளிமையாக சொன்னால் ஒரு ஆயிரம் ரூபாய் சேலைக்கு உரிய தகுதி இருக்க வேண்டும்.மேல் சொன்ன அனைத்து விசயங்களும் பெண்களுக்கு தகுந்த மாதிரி வேறுபடும்.இப்படிதான் அவர்கள் எல்லா தகுதிகளும் உள்ள ஒரு சிறந்த 250 ரூபாய் சேலையை தேர்ந்தெடுப்பார்கள்.
பெண்களை ஏன் புரிந்து கொள்ள முடியவில்லை?
ஏனென்றால் ஒரு பெண்ணுக்கே தான் யார்? தனக்கு என்ன வேண்டும்? என்பது தெரியாது.பிறகு நாம் எப்படி தெரிந்துகொள்வது.
மேலே சொன்ன உதாரணத்தையே எடுத்துக்கொண்டால்.அந்த சேலை எடுக்கும் பெண்ணுக்கே தான் இப்படியெல்லாம் நடந்து கொள்கிறோம் என்பது தெரியாது.பட்டிக்காட்டுதனமான சேலை என்று ஒரு பாய்ண்ட் சொல்லி இருக்கிறேன் என்றால் உலகில் உள்ள ஒவ்வொரு பெண்ணும் அதற்கு ஒவ்வொரு அர்த்தம் சொல்லுவாள்.பெண்களை புரிந்து கொண்டு சேலை டிசைன் செய்தால் ஒரு பெண்ணுக்கே சேலை டிசைன் செய்வதில் நம் எல்லோருடைய வாழ்க்கையே முடிந்துவிடும்.ஏனென்றால் அவர்களுக்கே என்ன டிசைன் வேண்டும் என்பது தெரியாது.நாம் டிசைன் செய்து காட்டிக்கொண்டே இருக்க வேண்டும்.அவர்கள் உள்ளுணர்வு அதை வேண்டுமா வேண்டாமா என்பதை முடிவு செய்யும்.
ஏன் ஒவ்வொரு பெண்ணும் கையில் கைகுட்டை அல்லது பை,தனித்துவமான ஆடை அலங்காராம் செய்கிறார்கள் தெரியுமா?
ஏனென்றால் பெண்களுக்கு அடிப்படையிலே ஒரு பிடிமானமும்,ஒரு தனித்துவ குறியீடும் தேவைப்படுகிறது.உதாரணமாக எல்லா மலர்களும் ஒரே போல் இருந்தால் நமக்கு அதனதன் அழகில் வித்தியாசம் தெரியாது.அது போல் ஒவ்வொரு மலருக்கும் தனித்துவமான அடையாளங்கள் வேண்டும். அப்போது தான் வண்டுகள் குறிப்பிட்ட மலரை அடையாளம் காணமுடியும்.இப்படிதான் தான் பெண்களும் தங்களுக்கென ஒரு அடையாள குறி ஏற்படுத்திக்கொள்கிறார்கள்.அப்போது தான் ஆண்களால் எளிமையாக அந்த பெண்ணை அடையாளம் காண முடியும்.
பெண்கள் ஏன் பேசிக்கொண்டே இருக்கிறார்கள்?
பெண்கள் இயல்பிலே வெளிப்படுத்தும் தன்னை கொண்டவர்கள்.அது அழகானலும் சரி அழுகையானலும் சரி.மனதில் எதையுமே வைத்துக்கொள்ள விரும்புவது இல்லை.அதை வெளிப்படுத்தியாக வேண்டும்.அதனால் தான் பெண்களுக்கு தங்கள் பேச்சை காது கொடுத்து கேட்கும் ஆண்களை ரொம்ப பிடிக்கும்.ஒரு நாள் ஒரு விசயத்தை மனதில் வைத்து வெளிப்படுத்தா விட்டால் பெண்களுக்கு தூக்கமே வராது.உண்மையில் எல்லா ஆண்களும் காதலிக்கும் போது பெண்களின் பேச்சை கேட்பது போல்,பேசிக்கொண்டே இருப்பது போல் நடிக்கிறார்கள்.ஏனென்றால் ஆண்களுக்கு இயற்கையிலே அந்த தன்மை கிடையாது.மேடைப்பேச்சாளர்கள் பாதி பேர் வீட்டில் பேசுவதே இல்லை என்பது தான் உண்மை.பேசிக்கொண்டே இருக்கும் காதல் கல்யாணத்திற்கு பின் நாறிவிடுகிறது என்பதுதான் உண்மை.
இறுதியாக பெண்களுடன் வாழ்வது எப்படி?
இந்த கட்டுரையை நான் எழுத ஆரம்பித்ததே இந்த கேள்விக்காக தான். நாம் எல்லோரும் பெண்களை தவறாக புரிந்து கொண்டிருக்கிறோம் இல்லை இல்லை புரிந்து கொள்ளவே இல்லை என்பது தான் உண்மை.ஏன்? நாம் யாரும் புரிந்து கொள்ள முயற்சி செய்யவில்லை.ஒரு சேலை எடுக்க இவ்வளவு நேரமா?மேக்கப் போட இவ்வளவு நேரமா? என கோபித்துக்கொள்கிறோம்.ஆனால் ஏன் இவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்பதை அறிய முயற்சி செய்வதில்லை.உண்மையில் எல்லா பெண்களுக்கும் சில விசயங்களில் ஆலோசகர் தேவைப்படுகிறார்.அவர்களும் கேட்க தயாராகவே இருக்கிறார்கள்.ஆண்கள் மனதில் ஒரு விசயத்தை நினைத்தவுடனே செயல்பட ஆரம்பித்து விடுகிறார்கள்.யோசிப்பதில்லை.பெண்கள் பல வழிகளில் யோசித்துக்கொண்டே இருப்பார்கள்.செயல்படுவதில்லை.பெண்களிடம் யோசனைகளை கேட்டுக்கொண்டு ஆண்கள் செயல்பட வேண்டும்.இது தான் இயற்கையான வழி.
மற்றொரு முக்கியமான விசயம் பெண்கள் சார்ந்து வாழ்பவர்கள்.அவர்கள் தங்களுக்கு பாதுகாப்பு அளிக்கும்,அன்பை அளிக்கும் ஆணை சார்ந்து வாழ்கிறார்கள்.அவர்களுக்கு ஒரு நல்ல அப்பா, நல்ல அண்ணண், நல்ல நண்பன்,நல்ல காதலன், நல்ல கணவன் என நிறைய நல்ல விசயங்கள் தேவைப்படுகிறது.இதை ஆண்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
சரி ஏன் கடவுள் பெண்களை மட்டும் இப்படிப்படைத்தான்?
வாழ்க்கையை சுவாரசியமாக்கத்தான்.எல்லாமே புரிந்து விட்டால்,தெரிந்து விட்டால் வாழ்க்கையில் தேடல் நின்றுவிடும்.சுவாராசியம் தீர்ந்துவிடும்.அதனால்தான் கடவுள் தன்னையும் ,பெண்களையும் புரிந்து கொள்ளமுடியாத அளவுக்கு படைத்து விட்டான்.
பெண்களை உற்றுப்பாருங்கள்,கூர்ந்து கவனியுங்கள்,வாழ்க்கையே சுவாரசியமாகி கவிதைபோல் ஆகிவிடும்.
No comments:
உங்கள் கருத்துக்கள் இங்கே......
Your comments here ......
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.