குதிரை வீரன் குணா


குதிரை வீரன் குணா –
அத்தியாயம் 1 மரணப் பிட்டம்

பெற்றோர்கள் அவனுக்கு குணசேகரன் என பெயரிட்டார்கள். வேலையற்ற இளைஞர்கள் நட்பு என்ற பெயரில் குணா என அழைக்க, அதுவே நிலைத்தது.

குணாவின் குடும்பம் சற்று நடுத்தரமானது. போக்குவரத்திற்கு பெரும்பாலும் அவன் தன் கால்களையே பயன்படுத்தி வந்தான். மற்ற இளைஞர்களைபோல தனக்கே ஒரு குதிரை என்ற ஆசையும் அவனுள் இருந்தது.

ஒவ்வொரு முறையும் குதிரை சந்தை நடக்கும்போதும், அதை தவறாமல் பார்வையிட போய்விடுவான். குதிரைகளின் நடை, வேகத்தை சோளத்தை கடித்த வாறே பார்த்து பெருமூச்சு விடுவான்.


என்றேனும் ஒருநாள் நானும் ஒரு புரவியை வாங்குவேன். குதிரை வீரர்களை போல புதிய இடங்களை தேடிப் போவேன். போர்க்களங்களை தவிர்த்து விட வேண்டும். ஆரோக்கியமான வாழ்விற்கு அவை உதவாது.

ஊழ் அவனை குறி வைத்த அந்நாளில் குணா, குதிரை சந்தையில் குதிரைகளை பார்த்த வண்ணம் அலைந்துக் கொண்டிருந்தான். குதிரைகள் கட்டிய இடத்தில் சற்று சாய்ந்த வண்ணம், வீரனுக்குரிய தோரணையில் அவன் சோளத்தை ஒரு கடி கடித்து, அவன் முதுகில் வாலை உரசும் குதிரையை தட்டிய வண்ணம் நின்றிருந்தான். குதிரை வியாபாரி அவன் குதிரை வாங்குபவனல்ல என முடிவு கட்டி, அவனை கெட்ட வார்த்தையில் விளித்து குதிரை சவுக்கை தேடிப் போகையில், குணா அவ்விடத்தை விட்டு நகர்ந்தான்.

ஊழ் அவன் பின் தொடர்ந்தது.

மற்றொரு இடத்தில் அதே பாணியில் குணா நின்று, சோளத்தை பாதி முடித்திருந்தான். குதிரை வால் அவன் முதுகை தொடுகையில், குதிரை வீரர்களுக்குரிய பாணியில் திரும்பாமல் அதன் பிட்டத்தை பளீரென்று அறைந்தான்.

குதிரை சந்தையில் சட்டென்று பேச்சரவங்கள் அடங்கி, பெரும் அமைதி நிலவியது. குணா திரும்பினான்.

சேவகபுரி இளவரசி பூங்காவனம் தன் சிவந்த பின்புறத்தினை பற்றி, அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

(தொடருமா?)






அத்தியாயம் 2. துரத்தல்

பொதுவாக இளவரசிகளை பற்றிய புரிதல் அனைத்திலும் எதிர்மாறாக இருப்பவள் சேவகபுரி இளவரசி பூங்காவனம். அவளின் புட்டத்தில் மக்கள் முன்னிலையில் பளீரென்று ஒரு சாமானியன் தட்டினான் என்றால் நாட்டிலுள்ள சொற்ப புரட்சிகாரர்கள் கிளர்தெழுந்து விடமாட்டார்களா?

தன் அறையில் உள்ள திரைச்சீலையில் அழுக்குக் கையை வைத்த பணியாளன் ஒருவனின் கையை பாம்புப் புற்றில் வைக்க ஆணையிட்ட இளவரசியிடம் இதற்காக மனமுருக மன்னிப்பு கேட்டால் அவள் மன்னிக்கப் போவதில்லை. எப்படியும் மரணம்தான். தப்பியோடினால் சற்று தள்ளி போடலாம் என்ற எண்ணம் உதித்தெழ, குணா பக்கத்தில் உள்ள குதிரையில் ஏறி மின்னல் வேகத்தில் சந்தையை விட்டு விரைந்தான்.

அவனுக்கு அது மின்னல் வேகமாக பட்டாலும், அது ஒரு மட்டஜாதி குதிரை. நிதானமான வேகத்தில்தான் சந்தையை விட்டு வெளியேறியது.

இளவரசி பூங்காவனம் எவ்வித உணர்ச்சியையும் வெளிக்காட்டாமல் தன் பல்லக்கில் ஏறி அரண்மனைக்கு திரும்பினாள். காவல் தலைவன் காரி உள்ளூர நடுங்கிக் கொண்டிருந்தான். இவ்வாறான நிகழ்வினை அவன் எதிர்பார்க்கவே இல்லை. அந்த புரட்சிக்காரன் சந்தையை விட்டு வெளியேறிய பிறகுதான், அந்த நிகழ்வின் அதிர்ச்சி அவனை தாக்கியது.

தன் மாளிகை வளாகத்தில் நின்ற பல்லக்கில் இருந்து இறங்கிய இளவரசி, காரியை அழைத்தாள்.


காரி, நாளை நான் நகர் கூடலுக்கு செல்லும் போது அந்த வீணனின் கொட்டைகளை என் ரதம் இடறி விட்டு செல்ல வேண்டும். அது நடக்கவில்லையென்றால், உங்கள் அனைவரின் சுன்னிகளையும் அறுத்து காக்கைகளுக்கு வீசி விடுவேன்.

(தொடரதான் வேண்டுமா?)பார்க்கலாகாது.



அத்தியாயம் 3. ரணபுஜன்


சேவகபுரியில் புரட்சியாளர் மன்னருக்கு தகவல் தொடர்பு முன்னேற்றத்தின் உச்சத்தில் இருக்கும் இன்றைய காலக்கட்டத்திலேயே, சேதன் பகத் எழுவதில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார் என்கிற வதந்தியை நம்பி நாம் சற்று மகிழ்ந்து கொள்கிறோம். அன்றைய காலக்கட்டத்தில் தகவல் எவ்வாறு திரிந்து செல்லும் என்பதை பார்ப்போம்.
சாணக்கியபுரி இளவரசன் ரணபுஜன். பெயருக்கேற்றதுபோல் இரு கைகளிலும் காயங்கள் உள்ளவன். அதீத உடற்பயிற்சியினால் விம்மி பெருத்த சதைக்கோளங்களுடன் இருக்கும் முன்கோபி. இளவரசி பூங்காவனத்திற்கும் அவனுக்கும் திருமண பொருத்தம் அவர்களது பெற்றோர்களால் முடிவு செய்யப்பட்டிருந்தது.
தன் அழகினை ஆடியில் பார்த்து இரசித்துக் கொண்டிருகையில், அவனுக்கு ஒற்றனது ஒலை வந்தது.
மதிப்புக்குரிய வீர தீர ரணபுஜருக்கு.எதிரான நடவடிக்கைக்களை தொடங்கியிருக்கிறார்கள். அப்புரட்சி பக்கவாட்டில் நகர்ந்து சாணக்கியபுரிக்கும் வர நேரிடலாம். இங்கும் சொற்ப புரட்சிகாரர்கள் காரணம் தேடியவண்ணம் இருக்கின்றார்கள்.
இந்த புரட்சிக்கு சூழி போடும் நிகழ்ச்சி நேற்றைய தினம் குதிரை சந்தையில் நடந்தது.
சந்தைக்கு சென்ற இளவரசியின் கூந்தலை பிடித்து இழுத்து, அவளின் புட்டத்தில் கை வைத்த ஒரு புரட்சிக்காரன் புரட்சி தன் பூபாளத்தை பாடும் நேரம் கனிந்து விட்டது என உரக்கக் கூவி, அவளது இதழ்களை முத்தமிட்டு கரும்புரவியில் சிரித்தவாறே சென்றான்.
இது தொடர்பாக துணிகர ஒற்று நடவடிக்கைகளை நான் மேற்க்கொள்ள உள்ளேன், இளவரசே. செலவிற்கு பொன் கழஞ்சுகளை அனுப்பி வையுங்கள் என தண்டமிட்டு கேட்டுக் கொள்கிறேன்.
உங்கள் பிரியத்திற்குரிய ஒற்றன்





(அய்யகோ, இனி என்ன நிகழ போகிறதோ?)



அத்தியாயம் 4. அழுகை

நீண்ட தொலைவு கடந்த பிறகு, ஒரு மாந்தோப்பில் குணாவும், குதிரையும் இளைப்பாறினர்.


என் வாழ்க்கையின் லட்சியமே ஒரு குதிரை சொந்தமாக வாங்கி அனைத்து நிலங்களிலும் பயணம் செய்வது. இப்போது குதிரை இருக்கிறது. என் மனதில் மகிழ்ச்சி மட்டும் இல்லை.

சாணக்கியபுரிக்கு தன் குதிரையை தட்டி விட்டான். குதிரை காலில் காயம் பட்ட வாத்தின் வேகத்தில் ஒடலாயிற்று.

சாணக்கியபுரியின் கோட்டை வாசலில் ஒரு காவலன் குணாவை தடுத்து நிறுத்தினான்.

ஒரு காலாட்படை ஆள் ஒரு குதிரை வீரனை தடுத்து நிறுத்துவதா? குணாவிற்கு கோபத்தில் கன்னத்தின் ஒரு பக்கம் ஆட ஆரம்பித்தது.


வீரரே, இந்த படத்தில் இருப்பவனை பார்த்தீரா? உம்மால் இவன் கிடைத்தால் உமக்கு நூறு பொன்.

இப்போது குணாவிற்கு உடலெங்கும் உள்ள தசைகள் ஆட ஆரம்பித்தன. அவனுக்குள் ஆத்திரம், கோபம், சிறுநீர் பீறிட்டு வரும்போல தோன்றியது. முகத்தின் பெரும்பகுதியினை பீதி ஆக்கிரமிததுக் கொண்டது.


இவன் மாட்டினால் என் செய்வீர்?


இளவரசன் ரணபுஜர் இவர் கிடைத்தவுடன் இவர் பின்னால் ஒரு குத்தீட்டியை செருகி, உயிருடன் அவரது பாசறைக்கு அழைத்து வர உத்தரவிட்டுக்கிறார். அது கிடக்கட்டும். நீர் இந்த சீலையில் உள்ள நபரை பார்த்திருக்கிறீரா?

குரலை திடப்படுத்திக் கொண்டாலும், அதில் அழுகை குடியேறுவதை குணாவினால் தடுக்க இயலவில்லை.


வீரரே, எழுத படிக்க தெரியாத தற்குறி நான். என்னிடம் போய் இந்த படத்தினை காட்டி கேட்டால் என் செய்வேன்.

கடைசி வார்த்தை கேவலில் முடிந்தது.


சரி, நீ போம்.

விக்கியவாறே சாணக்கியபுரியில் குணா நுழைந்தான்.

(அழுதாலும், இன்னும் வரும்
அத்தியாயம் 5 வதந்தி

கோட்டை வாயிலில் நடந்த சம்பவத்தில் ஆடிபோயிருந்த குணா, சற்று பதுங்கி தொல்லைகள் ஓய்ந்த பின் வெளிவரலாம் என்றெண்ணி, ஆளரவமின்றி இருக்கும் ஒரு சத்திரத்தை தேர்ந்தெடுத்து யாரும் பார்க்கா வண்ணம் சுவரில் சாய்ந்து ஓய்வெடுக்க ஆரம்பித்தான்.

சிறிது நேரத்தில் களைப்புடன் ஒரு வணிகக் கூட்டம் சத்திரத்தில் வந்தமர்ந்தது.


இன்றைக்கு சாணக்கியபுரியில் அதிக கெடுப்பிடிகள் இருக்கிறது, பார்த்தாயா?

ரணபுஜனின் ஆணவத்தை அடக்க ஒரு வீரன் கிளம்பியிருக்கிறான் என்றான் சும்மாவா?

ரணபுஜனின் வருங்கால மனைவி அந்த பஜாரியை சந்தையில் புரட்டியெடுத்திருக்கிறான். அவன் செல்லுகையில் அவன் பாடிய பாடல்தான் இப்போது புரட்சியின் புதிய கீதம்.

அவள் இதழில் பச்சக்கென்று முத்தமிட்டு புரட்சியின் சுவை உணரடி கிளியே என்ற வசனம்தான் இப்போது இளைஞர்களிடம் பிரபலமாகி வருகிறது.

இளவரசியின் காவல் படைகள் நாளைக்குள் அவனை பிடிக்காவிட்டில் அவர்களுக்கு நேரும் கதி என்ன தெரியுமா?

ஹஹஹஹ புத்திசாலி அவள். கை, கால் இழந்த வீரரை கூட மணக்க கன்னியர் முன்வருவர்.

சேவகபுரியில் புரட்சிப் படை காட்டிலிருந்து வெளிவந்து குஜாரையே தங்கள் தலைவராக ஏற்றுக் கொண்டு, திரும்ப காட்டிற்கே சென்று விட்டனர்.

குஜாரா? அவன் பெயர் குகூலன் அல்லவா?

சேச்சே. அவன் பெயர் குயுக்தன்.

இல்லையில்லை, குஜீரன்.

குணா என்று சந்தையில் சொன்னதாக நினைவு

புரட்சி வீரன் குணாவா? இருக்கவே இருக்காது.

அனைவரும் சிரித்தார்கள்.

(சத்திரத்தின் மூலையில் கண்ணீர் விடுவது குணா மட்டுமா?
அத்தியாயம் 6 காதலன்

ரணபுஜன் இளவரசி பூங்காவனத்திடம் நாக்கைப் பிடுங்கிற மாதிரி நான்கு கேள்விகள் கேட்டுவிட்டு, சில முத்தங்கள் கொடுத்து போகலாம் என எண்ணிய வண்ணம் அவளின் மாளிகைகுள் நுழைந்தான்.

இளவரசி பூங்காவனம் மாளிகையின் சாளரத்தை பார்த்த வண்ணம் தீவிர சிந்தனையில் இருந்தாள். அந்த புரட்சிக்காரன் செய்தது போல அவளின் புட்டத்தை தட்ட, ரணபுஜன் முன் நகர்கையில் இளவரசி சரெலென்று திரும்பினாள்.


என்ன தீடீரென்று இங்கே விஜயம்?


என் மனைவியாக போகிறவளை ஒருவன் மக்கள் முன்னிலையில் பலாத்காரம் செய்திருக்கிறான். எப்படி நான் பொறுப்பது?


மூடா, அது நீ நினைப்பது போல் இல்லை. அவன் என் காதலன்.

அதிர்ந்து போன ரணபுஜன், சமாளித்துக் கொண்டு


என்ன சொல்கிறாய்?


காதலன் என்று தானே சொன்னேன், திருமணம் உன்னோடுதான். உனக்கே பல உறவுகள் உண்டு என அறிவேன்.


அவன் உன் காதலனா? புரட்சிக்காரன் இல்லையா?


அவன் செய்த புரட்சியெல்லாம் என் ….. சரி அதை விடு, மோகத்தினால் அந்த முட்டாள் அப்படியொரு தவறை இழைத்து விட்டான். அவனை சிறிது காலம் ஆலய தரிசனம் செய்ய சொல்லியிருக்கிறேன்.

அப்படியா? அவன் பெயரென்ன?

குஜாலன்.

அவள் மாளிகையை விட்டு வெளியே வந்த ரணபுஜன், தன் ஒற்றன் ஓ-வை கூப்பிட்டு,


அந்த குஜாலன் உயிருடன் பிடிபட வேண்டும். அவனை வதைச்சாலையில் வைத்து விசாரிக்க வேண்டும்.


இளவரசே,இப்படி ஆகி விட்டதே?

ரணபுஜன் விரக்தியுடன்,


விடடா, அவள் கன்னியும் அல்ல, எனக்கு பெரிய சுன்னியும் இல்லை. அரச வாழ்வில் இதையெல்லாம் தாங்கிதான் ஆக வேண்டும்.

(விரக்தி அவனுக்கு மட்டுமா?
அத்தியாயம் 7 துப்பு

தன் கொட்டைகளை இழக்க விரும்பாத காவல்தலைவன் காரி, துணை வீரனாக மாரியை அழைத்துக் கொண்டு, புரவியிலேறி துப்பு துலக்க சாணக்கியபுரிக்கு வந்தான்.

வாசலில் நின்றிருந்த யவனர் கூட்டத்தினை பார்த்ததும், அவர்களிடமிருந்தே துப்பு துலக்குதலை ஆரம்பிக்கலாமெண்ணி, மாரியிடம்


டேய், புரவியை பார்த்துக் கொள். நான் போய் யவன வீரர்களிடம் போய் பேசி விட்டு வருகிறேன்.


நானும் வருகிறேனே.

மூடனே, வீரர்களுக்கிடையே பேச்சுவார்த்தை நடக்கையில் தூர நின்று கவனி. ஒருநாள் நீயும் என்னிடத்திற்கு வரலாம்.

யவன வீரர்களிடம் சென்ற காரி, ஒரு குறுஞ்சிரிப்பினை முகத்தில் படர விட்டுக் கொண்டான்.

யவன வீரன் காரியை பார்த்ததும், யவன மொழியில்


ஆஹா, என் நீண்ட கொடுந்தனிமை உன்னால் முடிய போகிறது. வா வா

யவன மொழி தெரியாத காரி, புன்னகையை பெரிதாக்கி


இந்த சீலையில் இருக்கும் நபரை பார்த்திருக்கிறாயா?


இவள் பெண் போல இல்லையே? வேறு படங்கள் இருக்கிறதா?

மிக ஆபத்தானவன், ஒரு பெண்ணை பின்னால் தட்டி விட்டான்.

பின்புறம் பெரிதாக இருந்து என்ன பிரயோசனம், இவள் ஆண் போல இருக்கிறாளே

இவன் கிடைத்தால், என் அம்பு இவன் வாயில்தான் பாயும்

அதெல்லாம் சரி, வேறு பெண்கள் இல்லையா?

குதிரையில் இந்த பக்கம் வந்தானா?

யவனன் சோகத்துடன்,


நீ உன்னுடைய சரக்கினை பற்றி உயர்வாக சொன்னாய். என் நீண்ட கால தனிமையை இவள் மூலம் முடிப்பதாக இல்லை. நீ செல்லலாம்.

காரி ஏமாற்றத்துடன் திரும்பினான்.


தலைவரே, ஏதேனும் துப்பு கிடைத்ததா?

அவர்களுக்கு எதுவும் தெரியவில்லை. வா நகர் புகுவோம். எனக்கு தெரிந்த ஒரு சத்திரத்தில் இரவு தங்கலாம்.

(தொடரக் கூடும்)
அத்தியாயம் 8 சிறை

நாட்டு நலனுக்காக தன் தந்தையின் உள்ளாடையில் விஷ முள் வைக்கும்போது கூட இளவரசி பூங்காவனத்திற்கு இவ்வளவு மனப்போராட்டம் ஏற்பட்டதில்லை. அவனை என்ன செய்வது என்ற எண்ணமே மனதில் ஓடிக் கொண்டிருந்தது.

வெளியே வந்தவள், காவலன் மாரியை பார்த்து,


எப்படி அந்த விஷமி மாட்டினான்?

இளவரசி, தளபதி காரியும், நானும் ஒரு சத்திரத்தில் இரவு தங்கினோம். அங்கே இருட்டில் ஒரு வாலிபன் அமர்ந்திருந்தான். தளபதி அவனிடம் ஒலைச்சுருளைக் காட்டி, இவனை பார்த்திருக்கிறாயா என வினவ, மூக்கு சற்று நீளம் குறைவாக இருந்தால் இவன் என்னைப் போலவே இருப்பான் என வியப்புடன் கூறினான். அவனை பந்தத்தின் ஒளியில் இழுத்து வந்து பார்க்கையில், புரட்சிக்காரன் குஜாலனேதான்.

சாணக்கியபுரிக்கு தெரியாத வகையில் வணிகர் வண்டியில் ஒளித்து இங்கே கூட்டி வந்திருக்கிறோம்.

நல்ல வேலை செய்தீர்கள், நான் அவனை பார்க்க விரும்புகிறேன்.

தனது கொட்டைகளுக்கு ஏற்பட்ட இக்கட்டு விலகிய உல்லாசத்தில் தளபதி காரி உற்சாகமாக பாடிக் கொண்டிருந்தார்.


புதுசா பறிச்ச பச்சிலை போல

வாழத்தோப்பு பக்கம் நிக்கிற ரஞ்சிதமே

என் எச்சகலை மனசுல இருக்குறத

உன் ……

இளவரசியை பார்த்ததும், பாட்டை பாதியில் விட்டு விறைப்பானார்.


நான் அவனை பார்க்க வேண்டும்.

அந்த சிறைக் கதவை பவ்யமாக திறந்தார் காரி.

உள்ளே, கண்ணீருக்கும், சிறுநீருக்கும் மத்தியில் அமர்ந்திருந்தான் இக்காவிய நாயகன் குணா.
அத்தியாயம் 9 உளவாளி

அவளை கண்டதும் பெருங்குரலில் அழ ஆரம்பித்தவனை, இளவரசி பூங்காவனம் தொடைகளுக்கு நடுவில் ஒரு உதையை விட்டு அடக்கினாள்.


மூடனே, உன்னால் எனக்கு எவ்வளவு பிரச்சினைகள் தெரியுமா?

கண்ணீருடன், அது பற்றி தன்னால் ஊகிக்க இயலவில்லை என கூறி, ஒரு அறையை பெற்றான்.


உன்னை இங்கேயே கொன்று, நீ இருந்த அடையாளமே இல்லாமல் ஆக்க என்னால் முடியும். ஆனால் உன்னால் ஒரு வேலை ஆக வேண்டியதிருக்கிறது.

உன்னை வைத்தே சில அரசியல் நிகழ்வுகளை செய்ய உத்தேசித்திருக்கிறேன். அதற்கு நீ ஒத்துழைத்தால், நீ உயிர் பிழைப்பது மட்டுமின்றி, பரிசிலும் கிடைக்கும். என்ன சொல்கிறாய்?

நான் சிறிது யோசிக்க வேண்டும், இளவரசி.

காவல் தலைவன் மாரி குணாவின் தாடையை முரட்டுத் தனமாக திருப்பி


டேய், உனக்கு எப்பேர்ப்பட்ட பரிசில் கிடைக்க போகிறது, அதைப் போய் வேண்டாம் என்கிறாயா? முட்டாளா நீ?

ஒருவனிடம் முதல் முறையாக அடி வாங்கும்போது இருக்கும் பயம், பலமுறை சாத்தப்பட்டவுடன் வெகுவாக குறைந்து விடுவது உலக நியதி. அரசுப் பள்ளிகளில் சுமாராக படித்தவர்களுக்கு இது நன்றாக தெரியும்.

ஆகவே அத்தனை அடி வாங்கியும், சலிப்புடன் குணா சொன்னான்


அன்னத்திற்கே வழியில்லை, ஆட்டக்காரிக்கு ஆயிரம் பொன்னா?



(குணாவுக்கும் நேரும் இக்கொடுமை என்று முடியுமோ?
அத்தியாயம்10 தோமா குருசு

குணாவின் முகவாயை பிடித்து முரட்டு தனமாக திருப்பி, காவல் தலைவன் காரி சொன்னான்


மூடனே, கொட்ட தெறிக்க தோமா குருசு போல ஒடினா உன்னை பிடிக்க இயலாது என்றா நினைத்தாய்?

இளவரசி பூங்காவனம்


யாரந்த தோமா குருசு

என வினவினாள்


அவனொரு ஒடுகாலி யவனன், இளவரசி

என பவ்யமாக பதிலளித்தான் காரி.

இளவரசி மெல்லியதாய் தலையை அசைக்க, குணாவின் பற்கள் ஆடும் வகையில் ஒரு பேரறை கொடுத்தான் காரி.


எருமையே, அவன் கட்டுக்களை அவிழ்த்து விட சமிக்ஞை காட்டினேன்

கண்களில் நட்சத்திரம் பறப்பதை பார்த்த வண்ணம் குணா மெல்லிய குரலில்


பாவம், கொட்டை அளவிற்கே அவன் மூளையும் இருக்கிறது, இளவரசி.


அவனை சுத்தம் செய்து ஆலோசனை அறைக்கு அழைத்து வா

என ஆணையிட்டு திரும்பி சென்றாள்.

குணா நல்ல ஆடையுடன் இளவரசியின் ஆலோசனை அறைக்குள் காவல் தலைவன் காரி பின்தொடர நுழைந்தான்.


சாணக்கியபுரி என் நாட்டை ஆக்கிரமிக்க நினைக்கிறது. அந்நாட்டு இளவரசனை நான் மணப்பது மூலம் போரின்றி அடைய நினைக்கிறான் ரணபுஜன். அதற்கு தடையாக இருப்பது என் காதலனென்று அவன் கருதும் உன்னைத்தான். உன்னை தீர்த்துக் கட்ட அவன் ஆட்கள் இந்நாட்டின் எல்லை தாண்டி காத்துக் கொண்டிருப்பார்கள். இந்நாட்டை தாண்டினால் உன்னை மரணம் துரத்தக் காத்துக் கொண்டிருக்கிறது. உன் நிலைமை புரிகிறதா?

நன்றியுண்ர்வுடன் குணா


புரிகிறது இளவரசி. என் உயிரை காப்பாற்றியதற்கு பெரும் கடன் பட்டிருக்கிறேன்.


நல்லது, இன்றிரவே நீ காரியுடன் சாணக்கியபுரி கிளம்புகிறாய். அங்கே உனக்கான உத்தரவுகள் என் உளவு ஆள் மூலம் அளிக்கப்படும்,

காரி,குணாவின் பின் மெல்லிய புன்னகையுடன், அவன் காதில் விழுமாறு கிசுகிசுத்தான்


ஒருவனுக்கு நேரம் சரியில்லை என்றால், அவன் யானை மீது போனாலும் நாய் கடிக்குமாம்.

(குணாவை நாய் கடிக்குமா?)
அத்தியாயம்11 ஒற்றன்

மரணம் காத்திருக்கும் இடமென்று தெரிந்தும், மனத் திடத்துடன் அத்திசை நோக்கி செல்லும் வீரன் போல அன்றி, கலங்கும் வயிறுடன், கண்களில் கலக்கத்துடன் சாணக்கியபுரி நோக்கி குணாவும், காரியும் சென்று கொண்டிருந்தனர்.

காரி ரணபுஜனின் பாசறை பற்றி ஒற்று வேலைக்கு உதவும் பல தகவல்களை சொல்லிக் கொண்டே வந்தான்.


ரணபுஜன் பல கலைஞர்களை பாசறையில் வேலைக்கு வைத்திருக்கிறான். அவர்கள் அடிக்கும் அடியில் உன் கொட்டைகள் தானாகவே உதிர்ந்து விழுந்து விடும்.

பின்னால் ஒரு உருளையை செருகி,அதில் அழுத்தத்துடன் நீர் பாய்ச்சப்படும்போது, வாய் வழியாக இரகசிய தகவல்களும் வந்து விழும் என கேள்விப் பட்டிருக்கிறேன்.

அவர்கள் இதனை ஆரம்பிக்கும்போது கைதியின் நாபியில் பெரிய கற்பூரத்தினை கொளுத்தி அனைவரும் சூழ்ந்து, இச்சித்திரவதை வெற்றியடைய வேண்டுமென்று வணங்குவார்கள். மனதை உருக்கும் அந்நிகழ்ச்சியை வாழ்நாளில் ஒருமுறையேனும் காண வேண்டும்.


உன் தொப்பையில் கற்பூரத்தை ஏற்றுகையில் தெளிவாக காண்பாய்

என குணா மனதில் நினைத்துக் கொண்டான்.

சாணக்கியபுரி கோட்டை வெளிவாயிலை அவர்கள் நெருங்கினார்கள்.

இதற்கு முன் இளவரசியின் கோபத்திற்கு பயந்து, சாணக்கியபுரி கோட்டையை அணுகிய குணா வேறு இப்போதைய குணா வேறு என நினைத்து தனக்குள் நகைத்துக் கொண்டான்.

தனக்குள் நகைத்துக் கொள்வது ஒற்றர்களின் பழக்கம் என அவன் மனதில் மின்னலென ஒரு எண்ணம் ஒடியது. அதையும் எண்ணி தனக்குள் நகைத்துக் கொண்டான்.

கோட்டைக் காவலன் அவர்களை மறித்து,


வீரர்களே, இந்த சீலையில் இருக்கும் உருவத்தினை பார்த்திருக்கிறீர்களா? அவனை இளவரசர் ரணபுஜனின் பாசறை கலைஞர்கள் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.


வீரரே, எழுதப் படிக்க தெரியாத தற்குறி நான் என்னைப் போய் கேட்கிறீர்களே?

என கண்ணீர் வழியும் கன்னங்களுடன் குணா மறுமொழி பகிர்ந்தான்.

அவர்களுக்கு கோட்டையில் நுழைய அனுமதி கிடைத்தது.

மிகச் சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தி கோட்டைக்குள் நுழைந்திருக்கிறாய்,பலே, என குணாவின் உள்மனம் கெக்கலித்தாலும், அவனது கண்களில் இருந்து கண்ணீர் கொட்டிக் கொண்டேயிருந்தது, உடலில் நடுக்கங்கள் நிற்கவில்லை. அவனது உள்உள்மனம் அவன் சற்றும் மாறவில்லை என்று சொல்கிறதா?

தனக்குள் நகைத்துக் கொண்டான் குணா.

(கூடிய விரைவில் எத்தனை பேர் அவனுடன் சேர போகிறார்களோ


No comments:

உங்கள் கருத்துக்கள் இங்கே......
Your comments here ......


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.

அபிராமியின் பக்கம் . Powered by Blogger.